ரஜினியின் ‘கூலி’ படம், மேலும், ஒரு மெகா சாதனை..

Web Ads

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘கூலி’ திரைப்படம் சுமார் 90 கோடிக்கும் மேல் ஓவர்சீஸ் வியாபாரத்தில் சம்பாதித்துள்ளது.

இதுவரை வேறெந்த தமிழ்ப் படங்களும் செய்திடாத வியாபாரத்தை ரஜினியின் ‘கூலி’ படம் செய்திருக்கின்றது. இதைத்தவிர, இப்படம் 100 நாடுகளுக்கும் மேல் ரிலீஸாகவுள்ளதாக கூறப்படுகிறது.

Web Ad 2

இதுவரை ரஜினி படங்கள் வெளியாகாத ஒரு சில நாடுகளிலும் இப்படம் ரிலீசாக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதன் மூலம் 100 நாடுகளுக்கு மேல் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையையும் கூலி திரைப்படம் பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னதாக, விஜய்யின் ‘கோட்’ திரைப்படம் 50 நாடுகளில் வெளியானது. அதைத்தொடர்ந்து ‘தேவரா’ படம் 90 நாடுகளுக்கு மேல் வெளியானது. தற்போது ‘கூலி’ திரைப்படம் 100 நாடுகளுக்கு மேல் ரிலீசாகும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை பெற இருக்கின்றது. இதன் மூலம் ரஜினிகாந்த் மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதைப்பற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

coolie movie will release in more than hundred countries
coolie movie will release in more than hundred countries