எதிர்மறை விமர்சனங்களால் ‘கூலி’ பட வசூலில் பாதிப்பா.?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்துக்கு எதிர்மறை விமர்சனங்களும் குவிந்து வருகின்றன. இதனைத் தாண்டி அனைத்து மாநிலங்களிலும் இப்படம் வசூல் செய்து வருகிறது. இதனால், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
இதனிடையே, எதிர்மறை விமர்சனங்கள் தொடர்பாக, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறும்போது, ‘எதிர்மறை விமர்சனம் சொன்னால் நமக்கு விளம்பரம் கிடைக்கும் என்று பல பேர் சமூக வலைதளத்தில் இருக்கிறார்கள். இதே வேலையாகவும் சுற்றுகிறார்கள்.
விமர்சனம் செய்கிறவர்களும் இதைத்தான் செய்கிறார்கள். ஆனால், இதை எல்லாம் மக்கள் எடுத்துக் கொள்வது இல்லை. ‘கூலி’ படத்துக்கு அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. அனைத்து திரையரங்குகளிலும் ‘கூலி’ நல்லபடியாக ஓடிக் கொண்டிருக்கிறது. நாங்கள் அனைவரும் பெரிய வசூல் எதிர்பார்க்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
ரஜினி உடன் நாகார்ஜுனா, உபேந்திரா, அமீர்கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சவுபின் சாகீர் உள்பட பலர் நடிப்பில் வெளியான ‘கூலி’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
