அமெரிக்காவில் ‘கூலி’ படம் ரெக்கார்டு பிரேக்; மற்றும் ஒரு வைரல் நிகழ்வு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கேங்ஸ்டர் தேவாவாக மிரட்டியிருக்கும் ‘கூலி’ படம் நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது. படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே.
இந்நிலையில், தமிழ்நாட்டின் தியேட்டர்கள் விழாக் கோலம் பூண்டுள்ளது. முன்பதிவிலும் அண்டை மாநிலங்களிலும் சாதனை படைத்து வருகிறது.
அவ்வகையில், வட அமெரிக்காவில் ரெக்கார்டு பிரேக் செய்திருக்கிறது. அதாவது, டிக்கெட் முன்பதிவில் வட அமெரிக்காவில் 2 மில்லியன் டாலர்கள் பெற்றுள்ளது. அதாவது, ரூ. 17 கோடியே 52 லட்சத்து 88 ஆயிரத்து 525 வசூல் செய்திருக்கிறது. வட அமெரிக்காவில், இதுவரை எந்த தமிழ் படத்திற்கும் டிக்கெட் முன்பதிவில் 2 மில்லியன் டாலர்கள் வந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘கூலி’ படத்தை தயாரித்திருக்கும் சன் பிக் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கலாநிதி மாறன், ரஜினிகாந்த் பற்றி, இசை வெளியீட்டு விழாவில் பேசுகையில், ‘ரஜினி சார் ஒரு ரெக்கார்ட் மேக்கரும், ரெக்கார்ட் பிரேக்கரும் கூட’ என்றார். அவ்வாறே, வட அமெரிக்காவில் ரெக்கார்டை பிரேக் செய்துவிட்டார் ரஜினி.
அமெரிக்காவில் ‘கூலி’ படத்திற்கான டிக்கெட் கிடைப்பது கடினமாக உள்ளது. படம் ஓடவிருக்கும் தியேட்டர்களில் முதல் 5 நாட்களுக்கு டிக்கெட் இல்லை என்கிறார்கள்.
இந்நிலையில் ‘கூலி’ படத்திற்கு இந்த அளவுக்கு வரவேற்பு ஏன்? எதனால்? என்ன ஸ்பெஷல்? என்று அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் ட்வீட் போட, அவருக்கு, ‘ரஜினிகாந்த் 75 வயதிலும் சூப்பர் ஸ்டார்’ என ஆளாளுக்கு ஒவ்வொரு விளக்கம் கொடுத்தார்கள்.
அதையெல்லாம் பார்த்து வியந்த அந்த அமெரிக்கர், ‘வாவ் ரஜினி ஒரு GOAT’ என அதிசயித்துள்ளார். தற்போது இந்த நிகழ்வு இணையவெளியில் வைரலாய் தெறிக்கின்றது.
