கோமாளி படத்தை நிராகரித்த ஆர் ஜே பாலாஜி, காரணம் என்ன தெரியுமா?
கோமாளி படத்தை நிராகரித்துள்ளார் ஆர்.ஜே பாலாஜி.
ஆர்.ஜேவாக பயணத்தை தொடங்கி நடிகர் இயக்குனர் என வளர்ந்து வருபவர் ஆர் ஜே பாலாஜி. இவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது சூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் கோமாளி என்ற திரைப்படம் வெளியானது. அதில் முதலில் ஆர்ஜே பாலாஜி தான் நடிக்க இருந்தாராம்.
ஆனால் அவர் நடிக்காததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அதில் பெரிய படத்தில் நான் ஹீரோவாக நடித்தால் மக்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை அந்த நேரத்தில் நான் எந்த ஒரு படத்திலும் ஹீரோவாக நடிக்கவும் இல்லை.அதனால் தான் கோமாளி பட வாய்ப்பு நிராகரித்ததாக சொல்லி உள்ளார்.
இவர் சொன்ன இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.