CM Announcement About Moonaru Landslide
CM Announcement About Moonaru Landslide

CM Announcement About Moonaru Landslide  : மூணாறு நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டு பல ஆண்டுகளாக அங்கேயே தங்கி பணிபுரிந்து வந்துள்ளனர்.

மூணாறு அருகே ராஜமலை பெட்டியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் 63 உடலை இன்றுவரை மீட்டுள்ளனர் மேலும் ரேடார் கருவி மூலம் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

கேரள விமான விபத்து, மீரா மிதுன் சர்ச்சைப் பேச்சு பதிலடியை தொடர்ந்து சூர்யா வெளியிட்ட வருத்தமான பதிவு – விஷயம் என்ன தெரியுமா?(Opens in a new browser tab)

இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு தேசிய மீட்பு பணி குழுவினருடன் விரைந்து சென்று மீட்பு பணிகளை ஒருங்கிணைத்து இடிபாடுகளுடன் சிக்கிய 12 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.