பொன்னியின் செல்வன் பட கெட்டப்பில் நடிகர் விக்ரம் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Chiyaan Vikram in Ponniyin Selvan Gettup : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் நடிகர் ஜெயம்ரவி தனக்கான ஷூட்டிங்கை முடித்து விட்டதாக அறிவித்து இருந்தார்.

தேசம் பெருமை கொள்கிறது : தமிழக வீரருக்கு பிரதமர் வாழ்த்து

மேலும் மற்ற நடிகர்களுக்கான சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் விக்ரமும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் பட கெட்டப்பில் விக்ரம் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே தீயாக பரவி வருகிறது.

Sathish படத்தால் வடிவேலு படத்திற்கு வந்த சிக்கல்…!

இந்த புகைப்படத்தில் விக்ரமுடன் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் உள்ளார். இவர்களுக்கு பின்புறத்தில் கோட்டை சுவர் உள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் கோட்டைக்குள் இரண்டு ஜாம்பவான்கள் எனக்கு ஒரு இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.