தங்கலான் கெட்டப்பில் தயாராகும் நடிகர் விக்ரமின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பா.ரஞ்சித். வெரைட்டியான திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் “தங்கலான்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.

KGF மக்களின் வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படம் தொடர்பான அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் உற்சாகப்படுத்தி வரும் நிலையில் இப்படத்திற்காக தயாராகும் நடிகர் விக்ரமின் BTS வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் அவரது அர்ப்பணிப்பை பாராட்டி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.