Chennai International Films Festival 2020

சென்னை இன்டர்நேஷனல் பிலிம்ஸ் பெஸ்ட்டிவல் நிகழ்ச்சியில் இரண்டு திரைப்படங்கள் சிறந்த படத்திற்கான விருதுகளை பெற்றுள்ளது.

Chennai International Films Festival 2020 : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸாகி வருகின்றன.

ஆனால் இந்த திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விடுகிறதா என்றால் கேள்வி குறி தான். சில படங்கள் தான் மக்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெறுவதோடு விருதுகளையும் வெல்லும்.

அந்த வகையில் சென்னை இன்டர்நேஷனல் பிலிம்ஸ் பெஸ்டிவல் நிகழ்ச்சியில் வெற்றி துரைசாமி இயக்கிய என்றாவது ஒரு நாள் என்ற திரைப்படம் சிறந்த படத்திற்கான விருதை பெற்றுள்ளது.

அதே போல் சியான்கள் திரைப்படமும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது.

கேமரா மேனுக்கான ஸ்பெஷல் சூரி அவார்ட் என்றாவது ஒரு நாள் என்ற படத்திற்காக சண்முக சுந்தரம் என்பவருக்கு கிடைத்துள்ளது.

சென்னை இன்டர்நேஷனல் பிலிம்ஸ் பெஸ்ட்டிவல் 2020 - சிறந்த படங்களுக்கான விருதுகளை வென்ற 2 படங்கள்.!!

சிறந்த நடிகைக்கான விருது க/ பெ ரணசிங்கம் படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு வழங்கப்பட்டுள்ளது.