சந்திரமுகி 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபலம் முன்னணி இயக்குனராக திகழும் பி. வாசு இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் சந்திரமுகி 2. ரஜினியின் நடிப்பில் வெளியான இப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்ததை தொடர்ந்து தற்போது உருவாகி இருக்கும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ராணாவத் நடித்திருக்கிறார்.

மேலும் வடிவேலு, ராதிகா சரத்குமார், லக்ஷ்மி மேனன், மனோபாலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் விநாயகர் சதுர்த்திக்கு திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படம் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி அவர்கள் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஸ்வாகதாஞ்சலி என்ற பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக சிறிய வீடியோவுடன் படக்குழு அறிவித்துள்ளது.