நடிகை கங்கனா ராணாவத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சந்திரமுகி 2 படக்குழு வெளியிட்டுள்ளது.

கோலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி இயக்குனராக திகழ்பவர் பி.வாசு. இவரது இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் சந்திரமுகி திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. தற்போது நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு அவர்கள் இயக்கியுள்ளார். இதில் வேட்டையன் ராஜாவாக ராகவா லாரன்ஸ் நடிக்க நடிகை கங்கனா ராணாவத் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து வடிவேலு, ராதிகா சரத்குமார், லக்ஷ்மி மேனன், மனோபாலா, சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். ‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தில் வேட்டையன் ராஜாவாக லாரன்ஸ் இருக்கும் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. தற்போது கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், மனதை மயக்கும் அழகியாக கங்கனா இடம்பெற்று இருக்கிறார். இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.