பிரமாஸ்திரா படத்தின் டிரைலரை வெளியிட்ட படக்குழு – ஆர்வத்தில் ரசிகர்கள்.!!

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இணைந்து நடித்திருக்கும் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஹிந்தியில் பிரபல காதல் ஜோடியாக இருந்து தற்போது திருமணம் செய்துகொண்ட ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரும் இணைந்து நடித்த ‘ஏ தில் கே முஸ்கில்’ என்ற படத்தைத் தொடர்ந்து தற்போது நடித்திருக்கும் படம் தான் “பிரமாஸ்திரா” . இந்தப்படத்தை இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். 

இதை ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் கரண் ஜோக்கரின்  தர்மா புரோடக்சன் நிறுவனமும் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு பிரீதம் இசை அமைத்துள்ளார்.மேலும் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் பல மொழிகளில் வெளியாக உள்ளது. 

இந்நிலையில் மூன்று பாகங்களாக உருவாகி வரும் இந்தப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்திருந்த படக்குழு தற்போது இப்படத்திற்கான ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். இதனைப் பார்த்த ரசிகர்கள் இப்படத்திற்கு  மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.