ரசிகர்களை குஷி படுத்திய இரு பாலிவுட் நடிகைகளின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிரபல பாலிவுட் ஹீரோயின்களாக திகழ்ந்து வருபவர்கள் தான் ஜான்வி கபூர் மற்றும் சாரா அலிகான். இதில் ஜானகி கபூர் என்பவர் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவர் “தடாக்” என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சில படங்களிலேயே பிரபலமான இவர் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு கொண்டிருப்பார்.

அதேபோல் தற்போது அக்ஷய் குமார்,தனுஷ் நடித்த பாலிவுட் படமான “அட்ரங்கி ரே” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் பிரபலமான நடிகையான சாரா அலிகாணுடன் இணைந்து எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படத்தை ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக ஜான்வி கபூர் பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.