Billa Pandi Villian

Billa Pandi Villian : தல அஜித்தின் தீவிர ரசிகனாக ஆர்.கே சுரேஷ் நடித்துள்ள படம் பில்லா பாண்டி. இந்த படத்தை கே.சி பிரபாத் தயாரித்து உள்ளார்.

தமிழ் சினிமாவின் தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்தவர் ஆர்.கே சுரேஷ். அதுமட்டுமில்லாமல் வில்லனாகவும் பல படங்களில் மிரட்டி ரசிகர்களை கவர்ந்தவர்.

இவரது நடிப்பில் ராஜ் சேதுபதி இயக்கத்தில் கே.சி பிரபாத் தயாரிப்பில் மேயாத மான் இந்துஜா, தம்பி ராமையா என பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பில்லா பாண்டி.

நாளை முதல் உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த படம் தல ரசிகர்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளளது. வில்லனாக நடித்துள்ள கே.சி.பிரபாத் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டியுள்ளார்.

பில்லா பாண்டி படத்திற்கு பிறகு கே.சி.பிரபாத் தயாரிப்பாளராக மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த புது வில்லனாகவும் வலம் வருவார் என நம்பலாம்.

படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தல அஜித்தை பற்றிய காட்சிகள் இடம் பெறுவதால் இப்படம் நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு மிக பெரிய உற்சாகத்தை கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

நாளை முதல் உலகம் முழுவதும் வெளியாக உள்ள பில்லா பாண்டி படம் சிறப்பான வெற்றியடைய கலக்கல் சினிமா தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.