Bigil Censored With UA
பிகில் திரைப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் வியந்து போயுள்ளனர். மேலும் படத்திற்கு U/A சான்றிதழ் கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தை அட்லீ இயக்கியுள்ளார். AGS எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

நயன்தாரா, யோகி பாபு, கதிர், இந்துஜா, விவேக் என மிக பெரிய நடிகர்கள் பட்டாளம் இணைந்து நடித்துள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இந்நிலையில் சென்சார் சான்றிதழுக்காக அனுப்பட்டு இருந்த பிகில் திரைப்படத்தை பார்த்த அதிகாரிகள் படத்தில் எவ்வித காட்சிகளையும் கட் செய்யாமல் U/A சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.