Web Ads

வாட்டர் மெலன் ஸ்டார் பேச்சுக்கு பாட்டின் மூலம் பதிலடி கொடுத்த கானா வினோத்..வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

BiggBossTamil9 Day39 Promo1 Update
BiggBossTamil9 Day39 Promo1 Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் வாட்டர் மெலன் ஸ்டார் பார்வதியிடம் ராணியே மகாராணியே அறிவுக் கூர்மையாலும் கம்பீரத்தாலும் எதிர் நாட்டை வீழ்த்தி தர்பீஸ் நாட்டின் கொடியை நிலைநாட்டிருக்கிறீர்கள் என்று சொல்ல பிறகு எதிர் நாட்டு மன்னரை பார்த்து வாட்டர் மெலன் ஸ்டார் இளக்காரமாக சிரிக்க உடனே கானா வினோத் அதற்கும் பாட்டு பாடி பதிலடி கொடுக்கிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.