விஷால் மீது இருந்த காதல் உண்மை தான்…ஆனால்? தர்ஷிகா ஓபன் டாக்..!
விஷால் மீது இருந்த காதல் குறித்து பேசியுள்ளார் தர்ஷிகா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார்.
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தர்ஷிகா.
ஒவ்வொரு சீசனிலும் தொடரும் காதல் கதை போல் இந்த வருடமும் தர்ஷிகா மற்றும் விஷாலின் காதல் கதை தொடர்ந்தது. தர்ஷிகா எலிமினேஷன் ஆனபோது வி ஜே விஷால்க்கு அவருடைய செயினை கொடுத்துவிட்டு வந்தார் இது மட்டும் இல்லாமல் அவர்கள் பிக் பாஸ் வீட்டில் காதல் செய்தது அனைவருக்கும் தெரியும்.
அந்த வகையில் தற்போது விஷால் இடம் ஏற்பட்ட காதல் குறித்து கேட்டபோது நான் விஷாலை காதலித்தது உண்மைதான் ஆனால் அவர் என்னுடன் பேசும்போது நான் அழகாக இருப்பதாக சொன்னார். ஆனால் எனக்கு பின்னால் பேசும்போது மொக்க மூஞ்சி என்று பேசியுள்ளார். அவரைப் பற்றி நான் வெளியில் வந்து தான் தெரிந்து கொண்டேன். அவர் என்னிடம் நன்றாக நடித்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.