
பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் யார் தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ.!!
பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதுவிதமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் டாப் 5 போட்டியாளராக முத்து,பவித்ரா,ரயான், சௌந்தர்யா,விஷால் இடம் பெற்றுள்ளனர்.இவர்களில் டைட்டில் வின்னராக யார் வருவார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் முத்து குமரன் தான் டைட்டில் மற்றும் பரிசுத்தொகை வென்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
