பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார்? முழு விவரம் இதோ..!
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. போட்டியாளர்கள் அதிகம் இருப்பதால் கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்த வாரம் ஓட்டிங் நிலவரம் படி குறைந்த ஓட்டுக்களை பெற்று ரஞ்சித் கடைசியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாரம் ரஞ்சித் வெளியேற வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் முத்துக்குமரன் அதிக ஓட்டுக்களுடன் முதலிடத்தில் உள்ளார்.என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.