ஒவ்வொரு அணியில் இருந்தும் ஒருவர் இடம் மாற வேண்டும்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!
பிக் பாஸ் இன்று மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
நேற்று நடந்த ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் ஜாக்லின் ரஞ்சித் மற்றும் ரவிந்தர் மூவரும் குறைந்த வாக்குகளை பெற்ற நிலையில் உங்கள் மூவரில் ஒருவர் வெளியேறப் போவதாக விஜய் சேதுபதி சொல்லியிருந்தார்.
அந்த வகையில் ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முதல் வாரத்திலேயே வெளியேறினார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது வார நாமினேஷனில் ஆண்கள் பெண்களையும் பெண்கள் ஆண்களையும் நாமினேஷன் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இரண்டாவது ப்ரோமோவில் அன்சிகா மற்றும் முத்துக்குமரனுக்கு இடையே வாக்குவாதம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில் ஒவ்வொரு அணியில் இருந்தும் ஒருவர் அணி மாற வேண்டும் என்று சொல்ல ஆண்கள் அணியில் இருந்து பெண்கள் அணிக்கு தீபக் வர பெண்கள் அணியில் இருந்து தர்ஷா ஆண்கள் அணிக்கு செல்கிறார்.
வீடியோ இதோ
View this post on Instagram