பிக் பாஸ் : ஒரு வாரத்திற்கு ரவீந்தர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ..!

ஒரு வாரத்திற்கு ரவீந்தர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
18 போட்டியாளர்களின் முதல் போட்டியாளராக களம் இறங்கியவர் ரவீந்தர். முதல் வாரமே நாமினேஷனில் ரவீந்தர் இடம் பெற்றார்.
இந்நிலையில் நேற்று ஜாக்குலின் ரஞ்சித் மற்றும் ரவீந்தர் இருவரும் குறைந்த ஓட்டுக்களை பெற்றெறிந்த நிலையில் யார் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ரவீந்தர் வெளியேற்றப்பட்டார்.

ஒரு வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்த இவருக்கு 3.5 லட்சம் ரூபாய் சம்பளம் என தெரிய வந்துள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இது மட்டும் இல்லாமல் வெளியேறிய கையோடு விஜய் சேதுபதி இப்போ உள்ள இருக்குறவங்களுக்கு ரிவ்யூ கொடுப்பீங்களா என்று கேட்க உடனே என்னுடைய ஸ்டைல்ல கொடுக்கிறேன் என்று அனைவருக்கும் ஓப்பனாக ரிவ்யூ கொடுக்க போட்டியாளர்கள் ஷாக்கானது குறிப்பிடத்தக்கது.
