இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் விஷாலா? தர்ஷிகாவா? வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

Web Ads

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

BiggBoss Season 8 Tamil Day 70 Promo 2 Update
BiggBoss Season 8 Tamil Day 70 Promo 2 Update

ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் கடந்த வாரத்தோடு கேப்டன்சி எப்படி இருந்தது என்று விஜய் சேதுபதி கேட்க போட்டியாளர்கள் அனைவரும் பதில் சொல்லுகின்றனர். அதில் முத்துக்குமரன் எல்லா கேப்டனும் மரியாதைக்குரிய இடத்திலிருந்து இருக்காங்க ஆனா இவர் மட்டும் பரிதாபத்துக்குரிய இடத்தில் இருந்தார் என்று சொல்லுகிறார். மற்ற போட்டியாளர்களும் ரஞ்சித் கேப்டன்சி குறித்து நெகட்டிவ்வாக பேசுகின்றனர்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் இந்த வாரம் யார் இருவரில் வெளியேற வாய்ப்பு உள்ளது என்று போட்டியாளர்களுடன் கேட்க அவர்கள் தர்ஷிகா என சொல்லுகின்றனர். சில வாரங்களாக தர்ஷிகாவ பார்க்க முடியல என்றும் சொல்லுகின்றனர். உடனே விஜய் சேதுபதி கையில் கார்டுடன் வந்து பார்த்துடலாம் என்று எடுத்துக்காட்டுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.