Bigg Boss 4

பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்த லிஸ்ட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Bigg Boss4 Final Contestant List : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக நான்காவது சீசன் அக்டோபர் நான்காம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்கள் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

கொரானா வைரஸ் பரவல் காரணமாக 4 வது சீசன் 80 நாட்களாகவும் 16 பிரபலங்களுக்கு பதிலாக 12 பிரபலங்கள் எனவும் மாற்றப்பட்டுள்ளது.

அந்த 12 பிரபலங்கள் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரபலங்கள் இவர்கள் தான் என லிஸ்ட் ஒன்று வெளியாகி உள்ளது.

இதோ அந்த லிஸ்ட்

  1. ஷிவானி நாராயணன்
  2. ரியோ ராஜ்
  3. ஜித்தன் ரமேஷ்
  4. ஆஜித்
  5. அனு மோகன்
  6. கேப்ரில்லா
  7. சஞ்சனா சிங்
  8. கிரன் ரதொட்
  9. ரம்யா பாண்டியன்
  10. சனம் ஷெட்டி
  11. பாடகர் வேல்முருகன்
  12. அபிநயஸ்ரீ
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.