தீபக், ஜாக்லின் பிரச்சனை.. விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை, வெளியான முதல் ப்ரோமோ..!
தீபக், ஜாக்லின் பிரச்சனை குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஸ்கூல் டாஸ்க்கில் ஜாக்லின் மற்றும் தீபக் கிடையே வாக்குவாதம் ஏற்பட ஒரு கட்டத்திற்கு மேல் ஜாக்குலின் தீபக் காலில் விழுந்தார். அது குறித்து இன்று விஜய் சேதுபதி கேள்வி கேட்டுள்ளார்.
அதில், அவர்களது பக்கம் இருக்கும் நியாயத்தை சொல்ல விஜய் சேதுபதி ஒரு கேம் கொடுத்து விளையாட சொன்னா அதுல நீங்க உங்களுக்குள்ள இருந்த ஈகோவை வெளியே கொண்டு வந்து, அப்படி நீங்க விளையாடுறது பார்க்க நல்லாவே இல்ல என்று சொல்லுகிறார்.
View this post on Instagram