Bhoomi Movie Story Issue
Bhoomi Movie Story Issue

ஜெயம் ரவியின் புதிய படம் திருட்டு கதை விவகாரத்தில் சிக்கி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

Bhoomi Movie Story Issue : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக பூமி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் லட்சுமணன் இயக்க வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் டீசர் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஒரு விஞ்ஞானி விவசாயத்தை காக்க தன்னுடைய துறையை விட்டு விலகி விவசாயத்தில் ஈடுபடுகிறார் என்ற கதை களத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது.

ஒரே படத்தில் தல தளபதி.. ஓகே மட்டும் சொன்னா அடுத்த நாளே ஷூட்டிங் – பக்காவான கதையுடன் முன்னணி இயக்குனர்.!!

இந்த நிலையில் தற்போது துணை இயக்குனர் ஒருவர் இது என்னுடைய கதை என எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அந்தத் துணை இயக்குனர் தரப்பில் நியாயம் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இதனால் ஜெயம் ரவி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் தற்போது வரை எழுத்தாளர் சங்கம் இந்த விவகாரம் குறித்து வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.