Bharathi Raja Movies Secrets
Bharathi Raja Movies Secrets

தன்னுடைய 38 வருட திரைப்பயணத்தில் ஒரு முறை கூட ஆச்சி மனோரமாவிற்கு வாய்ப்புத் தராமல் இருந்து உள்ளார் பாரதி ராஜா.

Bharathi Raja Movies Secrets : தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதி ராஜா. அதன் பின்னர் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை இயக்கினார்.

38 வருடங்களாக தமிழ்த திரையுலகின் முக்கிய இயக்குனராக வலம் வருகிறார். அப்போதைய காலகட்டத்தில் உள்ள நடிகர்களுடனும் தற்போதைய ஹீரோக்களுடனும் இணைந்து நடித்தவர் மனோரமா.

ஆயிரக்கணக்கான படங்களில் நடித்துள்ள இவர் ஒருமுறைகூட பாரதிராஜா இயக்கத்தில் நடித்ததில்லை. பாரதிராஜாவும் இவருக்கு வாய்ப்பு கொடுத்ததில்லை.

பொல்லாதவன் படம் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா? இத்தனை வருடங்களுக்குப் பிறகு வெற்றிமாறன் கொடுத்த பதில்(Opens in a new browser tab)

அதற்கான காரணம் 16 வயதினிலே படத்தில் நடித்திருந்த காந்திமதி என்பவர் தான். காந்திமதியின் நடிப்பு பிடித்துப்போன பாரதிராஜா தொடர்ந்து தன்னுடைய படங்களில் அவரையே நடிக்க வைத்தார்.

காந்திமதியின் நடிப்பை விட மனோரமாவின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கும் என பலர் கூறியும் மனோரமாவிற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை பாரதிராஜா.