Vetrimaran About Pollathavan Story Secret
Vetrimaran About Pollathavan Story Secret

பொல்லாதவன் படம் Bicycle Thevies படத்தின் காப்பியா என இத்தனை வருடங்களுக்குப் பிறகு பதிலளித்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

Vetrimaran About Pollathavan Story Secret : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன் இவர் முதல் முதலாக நடிகர் தனுஷை வைத்து இயக்கிய பொல்லாதவன் என்ற படத்தின் மூலமாகத்தான இயக்குனராக அறிமுகமானார்.

இந்த படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அதேசமயம் இந்த படம் Bicycle Thevies என்ற ஹாலிவுட் படத்தின் காப்பி எனவும் பேச்சு கிளம்பியது.

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் மொத்த சீக்ரெட்டும் ரிலீஸ் – அதிர்ச்சியில் இயக்குனர்!

இந்த நிலையில் தற்போது வெற்றிமாறன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார். அதாவது பொல்லாதவன் படத்தை தொடங்கும் போதே இது Bicycle Thevies படத்தின் காப்பி என்று கூறுவார்கள் என தெரியும்.

ஆனால் அப்படி இரண்டு படத்தையும் ஒப்பிட்டு அந்த ஹாலிவுட் படத்தை அசிங்கப்படுத்த கூடாது. பொல்லாதவன் என்பது ஒரு கமர்சியல் திரைப்படம். Bicycle Thevies ஒரு கிளாசிக் திரைப்படம். இரண்டும் வெவ்வேறு தான், இவற்றை ஒப்பிடக் கூடாது என கூறியுள்ளார்.