Bharathi Raja Meet Actor Babu

20 வருடமாக உயிருக்குப் போராடி வரும் தன்னுடைய பட நாயகனை நேரில் சந்தித்து கண்கலங்கி உள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

Bharathi Raja Meet Actor Babu : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பாரதிராஜா. இவரது இயக்கத்தில் வெளியான என் உயிர் தோழன் என்ற படத்தில் நாயகனாக நடித்தவர் பாபு.

முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர் அடுத்தடுத்து நடிக்க 14 படங்களில் ஒப்பந்தமானார். ஆனால் இவரால் நான்கைந்து படங்களில் மட்டுமே நடிக்க முடிந்தது.

மனசார வாழ்த்துங்களேன் என்ற படத்திற்கான சூட்டிங்கில் சண்டைக் காட்சிக்காக மாடியில் இருந்து குதித்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

தீவிர சிகிச்சை அளித்த போதிலும் பாபுவை குணப்படுத்த முடியாததால் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக உயிருக்கு போராடி வருகிறார்.

படுத்த படுக்கையாக இருக்கும் இவரை இயக்குனர் பாரதிராஜா நேரில் சந்தித்து கண்கலங்கி உள்ளார்.