Bharathi Kannamma Update 11.08.2021

பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேர்வது போல கனவு கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் வெண்பா.

Bharathi Kannamma Update 11.08.2021 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மா வீட்டிற்கு ஹேமாவை பார்க்கச் சென்ற பாரதி எதிர்பாராதவிதமாக அங்கேயே தங்கும் நிலைமை ஏற்பட்டது. பாரதிகண்ணம்மா வீட்டில் தங்கி இருப்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பின்பு அங்கிருந்து அவரை அழைத்துவரச் சென்று போலீசாரால் திருப்பி அனுப்பப்பட்டார்.

திரும்ப வீட்டுக்கு வந்த என்றால் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேர்வது போல கனவு கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த கண்ணாடி பாரதி கண்ணம்மாவின் அருகில் சென்று அவரை தொட முயற்சிக்கிறார். தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட கண்ணம்மா என்ன செய்கிறீர்கள் என கேட்க நான் கட்டின தாலி இன்னும் உன் கழுத்துல இருக்கு நான் பக்கத்துல வரக்கூடாதா கண்ணம்மா என பாரதி கேட்கிறார். உடனே கண்ணம்மா மாமா என கூப்பிட இருவரும் கட்டி அணைத்து அன்பை பரிமாறிக் கொள்கின்றனர். ஆஹா பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என நினைக்க இறுதியில் அது வெண்பா கண்ட கனவு என தெரியவருகிறது.

திருப்பதியில்,13 மற்றும் 22-ந்தேதி கருட வாகன சேவை உற்சவம்..

விடிந்த பிறகு கண்ணம்மா தன்னுடைய மகளான லட்சுமி மற்றும் பாரதியின் மகளான ஹேமாவுக்கு எது நல்ல தொடுதல் எது கெட்ட தொடுதல் என சொல்லிக் கொடுக்கிறார். இதனைக் கண்ட பாரதி ஹேமாவுக்கு ஒரு அம்மா இருந்திருந்தால் இது எல்லாம் சொல்லிக் கொடுத்திருப்பார் என மனதிற்குள் நினைத்துக் கொள்கிறார். அதன் பிறகு கண்ணம்மா வீட்டிலிருந்து அவர் கிளம்புகிறார்.

Vijay TV super singer Poovaiyar talks about Thalapathy Vijay | #Master #Beast

போகும்போது லஷ்மியும் ஹேமாவும் நைட்டு தூங்குறதுக்கு இங்கேயே வந்து விடுங்கள் என கூறி அனுப்புகின்றனர். இதனால் பாரதி கண்ணம்மா வீட்டிற்கு வருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.