பாரதி வைத்த கோரிக்கைக்கு ஒரேடியாக போதுமென கையெடுத்துக் கும்பிட்டு கிளம்பியுள்ளார் கண்ணம்மா.

Bharathi Kannamma Episode Update 21.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பூஜை முடிந்த கையோடு பாரதிகண்ணம்மா படம் உன்கூட சேர்ந்து வாழனும்னு ஆசைப்படறேன். ஹேமா லட்சுமி என இரண்டு குழந்தையும் வளர்த்து அவங்கள நல்ல நிலைமைக்கு கொண்டு வரணும். லட்சுமி என்ன படிக்க ஆசைப் பட்டாலும் அவளை நான் படிக்க வைக்கிறேன். எப்போன்னு ஹேமாவுக்கும் உன்ன ரொம்ப பிடிக்கும் அவளுக்கு நீ நல்ல அம்மாவா இரு. ஆனால் இது எல்லாத்துக்கும் நடக்க ஒரே ஒரு கண்டிஷன். அது ஒரு கோரிக்கையும் கூட எடுத்துக்கோ என பாரதி சொன்ன அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். சொல்லுங்க என கண்ணம்மா கேட்கிறார்.

பாரதி வைத்த ட்விஸ்ட்.. ஒரே அடியாக போதுமென கையெடுத்துக் கும்பிட்டு கிளம்பிய கண்ணம்மா - பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

ஆமா நான் உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன் தப்பு பண்ணிட்டேன் என ஒத்துக்கோ. எல்லாத்தையும் இந்த நிமிஷமே மறந்துட்டு உன் கூட வாழ நான் தயாராக இருக்கேன். சந்தர்ப்ப சூழ்நிலையில் எல்லாரும் தப்பு பண்றது சகஜம்தான். நானும் அதை அப்படி எடுத்துக்கிட்டு மறந்து உன்னோட வாழறேன். நாம ரெண்டு பேரும் பிரிந்திருந்த இந்த ஏழு வருஷத்தில் நீயும் சந்தோஷமா இல்ல நானும் சந்தோஷமாக இல்லை. இனி வாழ்க்கை முழுக்க முன்னர் சந்தோஷமா வச்சு பார்த்துக்கறேன். ஆமாம்னு ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லு என கூறுகிறார்.

சௌந்தர்யா டேய் பாரதி என சத்தம் போட அமைதியா இருங்க நான் பேச வேண்டியது எல்லாம் நேர்மையா பொறுமையா எந்தவித சண்டையும் போடாமல் பேசிட்டேன். என் மனசுல இருந்தது மொத்தத்தையும் பேசிட்டேன் இனி பதில் சொல்லவேண்டியது கண்ணம்மா தான் அவளை பேச விடுங்கள் என கூறுகிறார். கண்ணம்மா ஒரேயடியாக கையெடுத்து கும்பிட்டு விட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் அங்கிருந்து கிளம்புகிறார்.

எல்லோரும் கண்ணம்மா பின்னாடியே செல்ல பாரதி அமைதியாக நிற்கிறார். பிறகு சௌந்தர்யா பாரதியை எதுக்குடா இப்படி நடிச்சு எல்லார் கழுத்தையும் அறுத்த என கேட்கிறார். நான் இப்பவும் சொல்றேன் அவளோட சேர்ந்து வாழ நான் தயாரா இருக்கேன். செய்த தப்பை ஒத்துக் கொள்வதில் அவளுக்கு என்ன பிரச்சனை? எவன் ஒருத்தன் செஞ்சது தப்பா நினைச்சு பார்க்கிறானோ அவன் தான் மனிதன். ‌‌ உடம்பு உடம்பு முழுக்க விஷம், உன் மனசு எல்லாம் குப்பை. உன்ன இந்த வைத்துள்ள தான் எத்தனை நினைக்கும்போது கேவலமா இருக்கு என சவுந்தர்யா திட்டுகிறார். பொறுமையா நான் எல்லாத்தையும் மறந்துட்டு வாழ சரினு சொல்லும் போதும் எல்லோரும் என்னை திட்டினா எப்படி? என் பக்கத்தில் இருந்து ஒருத்தர் கூட யோசிக்க மாட்டீர்களா என பாரதி கேட்கிறார்.

பாரதி வைத்த ட்விஸ்ட்.. ஒரே அடியாக போதுமென கையெடுத்துக் கும்பிட்டு கிளம்பிய கண்ணம்மா - பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

உடனே அகிலன் இதுக்கு நீ அவங்களை தனியா கூப்பிட்டு வச்சு பேசியிருக்கலாமே எதுக்குடா நல்லவன் மாதிரி நடிச்சு அவங்களோட பூஜையில் கலந்து கொண்டு பிறகு இப்படி எல்லார் முன்னாடியும் அவங்கள அசிங்கப்படுத்தி அனுப்பனும். தப்பு செஞ்சிருந்தா ஒத்துக்கலாம் செய்யாத தப்புக்கு ஆமாம் சொல்ல சொன்னா எப்படி? நீ எவ்வளவு பேருக்கு ஆபரேஷன் பண்ணி இருப்ப அதுல ஒருத்தர் ஆபரேஷன் பண்ணதனால இறந்திட்டார்னு ஒத்துக்க சொன்னா நீ ஒத்துப்பியா? அது எப்படிடா ஒத்துக்க முடியும் என பாரதி கேட்க அப்படித்தான் இதுவும் நீ பேசுறது இல்ல எந்த லாஜிக்கும் இல்லை. அவங்க உன்கூடதான் வாழணும்னு உன் காலை புடிச்சு ஒன்னும் கெஞ்சல எனத் திட்டுகிறார்.

நான் நியாயமா தான் பேசி இருக்கேன் என பாரதி சொல்ல ஆமா தப்பு எல்லாம் எங்க மேல தான். இவர் கண்ணம்மாவை பெத்ததே தப்பு, நீ அவளை பார்த்தது அவளை கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்னது அவளோடு தப்பு, உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்தது அந்த கடவுள் செய்த தப்பு. உன்ன பெத்தது நான் பண்ண தப்பு. இப்படி எல்லா தப்பும் நாங்கதான் பண்ணும் நீ எந்த தப்பும் பண்ணல என சௌந்தர்யா கூறி கண் கலங்குகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

‌ ‌‌‌