கண்ணம்மா விவாகரத்து பற்றி பாரதி அவருடைய சித்தியிடம் பேசுகிறார். வெண்பாவுக்கு பளாரென அடி கொடுக்கிறார் சௌந்தர்யா.

Bharathi Kannamma Episode Update 08.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மாவின் சித்தி அழைத்துப் பேசும் பாரதி கண்ணம்மாவுக்கு 5 லட்சம் மதிப்புள்ள சொத்தை எழுதி வைக்கிறேன். விவாகரத்து செய்ய அவளை சம்மதிக்க செய்யுங்கள் எனக் கூறுகிறார். அவருடைய சித்தி முடியாது என சொல்கிறார். உங்களுக்கு மட்டும் தனியா ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என கூறுகிறார் பாரதி. இதனால் அவருடைய சித்தி நான் கண்ணம்மாவிடம் பேசுகிறேன் என கூறுகிறார்.

உலக மல்யுத்தப் போட்டி : மெகா சாதனை  படைத்தார், இந்திய வீராங்கனை அன்ஷூ

இந்த பக்கம் சௌந்தர்யா வெண்பாவின வீட்டிற்கு சென்று நீ என்ன ஜோசியக்காரரா ராசி பலன் பார்க்க சொல்ல என கேட்கிறார். பாரதியோடு வாழ்க்கையிலே எதுக்கு தலை விடுற எனக் கேட்க உன்னுடைய கோபத்திற்கு காரணம் நீதான் என கூறுகிறார். நான் இல்ல அந்த வருண் கூட போய் தப்பு பண்ண கண்ணம்மா தான் என வெண்பா கூற பளார் என அறைகிறார் சௌந்தர்யா.

நிறைய கஷ்டங்களை பார்த்துட்டோம் ! – Actor Atharvaa speech | Thalli Pogathey

அவ என்னுடைய மருமகள் என்கிட்டயே அவளைப் பத்தி தப்பா பேசின நீ பாரதியிடம் என்னென்ன சொல்லி இருப்ப என மீண்டும் பளாரென்று அறைந்தார். கண்ணம்மாவுக்கு ஏதாவது துரோகம் பண்ணது இல்ல பண்ண நினைச்சாலும் சௌந்தர்யா விட இன்னொரு முகத்தைப் பார்ப்ப எனச் சொல்லிவிட்டு வருகிறார்.

இந்த பக்கம் கண்ணம்மா விவாகரத்து பேப்பரை வைத்துக்கொண்டு அமர்ந்திருக்க வெண்பா போன் செய்து கையெழுத்துப் போட்ட அடுத்த நொடி உன் பொண்ணு உன்னிடம் இருப்பா என கூறுகிறார். இதனால் கையெழுத்துப் போட தயாராகிறார் கண்ணம்மா‌. இந்த நேரத்தில் சௌந்தர்யா கண்ணம்மா என அழைக்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.