ட்விஸ்ட்டுடன் முடிவுக்கு வந்துள்ளது பாரதி கண்ணம்மா சீரியல்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாரதி கண்ணம்மா கழுத்தில் தாலி கட்டிய கையோடு சினேகன் இருவரிடமும் உறுதிமொழி பேச வைக்கிறார்.

அடுத்து ஷிவின், ஷர்மிளா உள்ளிட்டோர் வருகை தந்து பாரதி குடும்பத்துடன் போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். அதன் பிறகு எல்லோரும் சாப்பாட்டிற்காக காத்துக் கொண்டிருக்க சௌந்தர்யா யார் சமைக்கிறாங்க? சமையல் வேலை முடிந்ததா இல்லையா என கேட்க அவர்கள் எல்லாம் கணேசனும் தாமரை அக்காவும் பாத்துக்குறாங்க என சொல்ல அப்போது இருவரும் வர சௌந்தர்யா சமையல் பற்றி கேட்க சென்னையில் இருந்து வந்து சமைக்கிறார்கள் என சொல்லி பாக்கியா மற்றும் செல்வியை அறிமுகம் செய்ய பிறகு சாப்பாட்டை அனைவருக்கும் பரிமாறுகின்றனர்.

அதன் பிறகு பாரதியும் கண்ணம்மாவும் மாறி மாறி ஊட்டி கொள்கின்றனர். அதனைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா பாடல் ஒலிக்க பழைய காட்சிகள் மீண்டும் ஒளிபரப்புவதுடன் சுபம் போட்டு பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீசன் 2 குறித்த ப்ரோமோ வீடியோ வெளியானது.