பாரதி கொடுத்த ஷாக்கால் வெண்பா அதிர்ச்சியில் குழம்பி போயுள்ளார்.

Bharathi Kannamma Episode Update 02.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதியை நேரில் சந்தித்த கண்ணம்மா துளசியை வீட்டிக்கு அழைத்து நடந்ததை கூறினார். எனக்கு பிரசவம் பார்த்தது பாரதி தான் என்பதை எதற்கு சொல்லாமல் மறைச்ச என கேட்கிறார். எனக்கு இருக்க ஒரே உறவா உன்னை பார்த்தேன். ஆனா நீயும் என்னை ஏமாத்திட்ட. உனக்கு இரட்டை குழந்தை விஷயம் தெரிந்தும் சொல்லாமல் மறைக்குற என புலம்பினார்.

இன்று ராகுல்-மார்கன் மைன்ட் வாய்ஸ் : பிளே ஆஃப் சுற்றில் இருக்கப்போவது நீயா? நானா?

இந்த பக்கம் அகிலன் பாரதி கண்ணம்மா அண்ணி மேல் இவ்வளவு வெறுப்போடு இருக்க வெண்பா தான் காரணம். அவன் இதை பத்தி மறந்தாலும் அவனை தூண்டி விட்டுட்டே இருக்கிறது அவ தான் என கூறுகிறார்.

ஒரு வருஷத்துக்கு முன்னாடியே Doctor Release-ஆகி இருக்கனும் – Actress Priyanka Mohan SPeech

கண்ணம்மாவை சந்தித்த பாரதி நேராக வெண்பா வீட்டிற்குச் செல்கிறார். கண்ணம்மா இரட்டை குழந்தை பிறந்ததாக கூறியதாக சொல்கிறார். எப்படி தான் இப்படி பொய் சொல்றாலோ என கூறுகிறார். அவ இதை யார் கிட்ட சொன்னாலும் அவங்க நம்புவாங்க, ஆனால் நான் நம்ப மாட்டேன். அவளுக்கு பிறந்தது ஒரு குழந்தை தானு சொல்ல வெண்பா எப்படி சொல்ற என கேட்கிறார். அவளுக்கு பிரசவம் பார்த்து அவளோட குழந்தையை தொட்டு தூக்கியது நான் தான் என கூற வெண்பா அதிர்ச்சி அடைகிறார்.

அதன் பின்னர் கண்ணம்மாவுக்கு பிரசவம் பார்த்து, அவ பொண்ண படிக்க வைக்கிற, டிரெஸ் எடுத்து கொடுத்து கொஞ்சுற ஆனால் கண்ணம்மாவ பிடிக்காதுனு சொல்ற என வெண்பா கூற பாரதி கடுப்பாகி அங்கிருந்து கிளம்புகிறார். மேலும் கண்ணம்மா வெண்பா பற்றி சொன்னதை சொல்லாமல் மறைத்து விடுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்.