பீஸ்ட் படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

Beast Censored With UA : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவதுமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி இந்த வாரம் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளிவந்தன.

அதற்கேற்றாற்போல தணிக்கை குழுவினர் படத்தை தணிக்கை செய்து யு ஏ சான்றிதழ் அளிக்கப்பட்ட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 155.38 நிமிடங்கள் ( 2 மணி நேரம் 35 நிமிடங்கள் ) எனவும் தெரிய வந்துள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ரிலீஸ் தேதியுடன் வெளியாகி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.