தளபதி 67 திரைப்படத்தில் பிக் பாஸ் 6 பிரபலம் இணைந்திருப்பதாக தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் “தளபதி 67” திரைப்படத்தில் விஜய் அவர்கள் வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிக்க இருக்கிறார்.

இப்படம் தொடர்பான தகவல்களுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது, பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இலங்கை பெண்ணாக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமான ஜனனி மற்றும் பிரபல கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.