பிக் பாஸ் பிரபலம் ஆயிஷா தனது instagram பக்கத்தில் காதலர் குறித்த தகவலை பகிர்ந்து இருக்கிறார்.

தமிழ் தொலைக்காட்சியில் பிரபல முன்னணி தொலைக்காட்சி சேனலாக திகழும் விஜய் தொலைக்காட்சியில் மக்களின் பேவரைட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் அண்மையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதில் நடிகர் அசீம் டைட்டிலை வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் இதில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டிருந்த ஆயிஷா தனது காதலர் குறித்த தகவலை சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்தின் மூலம் பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

மீண்டும் காதலில் ஆயிஷா… யார் அந்த காதலர்?? - வைரலாகும் போட்டோ.!

அதாவது, சின்னத்திரை நடிகையும், பிக் பாஸ் பிரபலமுமான ஆயிஷா தனது காதலை உறுதிப்படுத்தி தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவரது காதலரின் முகத்தை காட்டாமல், அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு “விரைவில் இது குறித்து அறிவிப்பேன்” என குறிப்பிட்டு இருக்கிறார். காதல் விவகாரத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் இவ்வாறு பதிவின் மூலம் தெரிவித்து இருப்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மீண்டும் காதலில் ஆயிஷா… யார் அந்த காதலர்?? - வைரலாகும் போட்டோ.!