பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற தாமரைச் செல்வியின் புதிய வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

BB thamarai Selvi in Modern Dress : விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மனதை கவர்ந்த நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை மாபெரும் நடிகரான உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் 5வது சீசனில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அதில் தனது வெகுளித்தனத்தால் மக்கள் மனதை வென்றவர் தான் தாமரைச்செல்வி.

தாமரை செல்வியா இது? மாடர்ன் ட்ரெஸ்ஸில் எப்படி போஸ் கொடுத்து இருக்கிறார் பாருங்க.!!

இவர் இந்த நிகழ்ச்சியின் கடைசி ஒரு சில வாரங்களில் வெறித்தனமாக விளையாடினார். பின்னர் இறுதி வாரத்தில் வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிபி அல்டிமேட் என்ற 24 மணி நேரமும் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாமரை நான்காவது இடத்தை வெற்றி பெற்றார்.

தாமரை செல்வியா இது? மாடர்ன் ட்ரெஸ்ஸில் எப்படி போஸ் கொடுத்து இருக்கிறார் பாருங்க.!!

அடுத்ததாக பிபிஜோடிகள் சீசன் 2 என்ற புதிய நிகழ்ச்சியில் தாமரை தனது கணவரோடு இணைந்து நடனமாடுகிறார். இந்நிலையில் எப்போதும் புடவையில் இருக்கும் தாமரை இந்த நிகழ்ச்சிக்காக மாடர்ன் டிரஸ் அணிந்து கொண்டு ஐக்கி பெர்ரியுடன் கேரவனில் நடனமாடிய வீடியோ ஒன்று வெளியானது. இதனைப்பார்த்த ரசிகர்கள் தாமரை அக்காவா இது என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.