வாங்கிய விருதைத் திருப்பி கொடுக்க உள்ளார் பாலாஜி முருகதாஸ்.

Balaji Murugadoss Returning Award : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். மாடலிங் துறையில் இந்திய அளவில் புகழ் பெற்ற இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் இன்னும் பிரபலம் அடைந்தார்.

வாங்கிய விருதை திருப்பி கொடுக்கும் பாலாஜி முருகதாஸ், காரணம் என்ன தெரியுமா?

எதையும் வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டதால் இவருக்கு கேர்ள் ஃபேன்ஸ் அதிகமாக கூடியது. இவருக்கு பிரபல யூடியூப் சேனல் பிக்கஸ்ட் சென்சேஷனல் ஆன் ரியாலிட்டி டெலிவிஷன் என்ற விருதை வழங்கியது. ஆனால் தனக்கு விருது வழங்கியதையும் தான் பேசியதையும் அந்த யூடியூப் சேனல் ஒளிபரப்பு செய்யவில்லை. இதனால் அந்த விருதை தான் திருப்பி கொடுத்து விடுவதாக பாலாஜி முருகதாஸ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாலாஜி முருகதாஸின் இந்த முடிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.