ஜிவி பிரகாஷ் நடிப்பில் சதீஷ் இயக்கத்தில் வெளியாகியுள்ள பேச்சிலர் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

Bachelor Movie Review : தமிழ் சினிமாவில் நடிகராக இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். வருடத்திற்கு டஜன் கணக்கில் படங்களில் நடித்து வரும் இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் தான் பேச்சுலர். இந்த படத்தை சதீஷ் என்பவர் இயக்க டில்லி பாபு என்பவர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

சக்தி எனப்படுவது யாதெனின்..

தமிழில் ஒரு பிரேமம்.. அசத்தல் காதல் கதை - ஜிவி பிரகாஷின் பேச்சிலர் முழு விமர்சனம்.!!

படத்தின் கதைக்களம் :

ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர்களுக்கு இடையே ஏற்படும் காதல், சண்டை மற்றும் பிரிவு ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இடையே ஏற்பட்ட காதல் என்னென்ன பிரச்சனை எல்லாம் சந்திக்கிறது இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

ஜிவி பிரகாஷ் வழக்கம்போல தன்னுடைய நடிப்பால் அசத்தியுள்ளார். திரிஷா இல்லனா நயன்தாரா படத்தைப் போலவே இந்தப் படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

திவ்யபாரதி அழகு பதுமையாக வந்து படத்திற்கு அழகு சேர்த்துள்ளார். அவருடைய கதாபாத்திரத்தை அழகாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் உடனான கெமிஸ்ட்ரி அழகாக பொருந்தி உள்ளது.

படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர் நடிகைகள் அனைவருமே கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்துள்ளனர்.

அஜித்தே சொன்னாலும் நாங்க Thala-ன்னு தான் கூப்பிடுவோம் – Actor Sendrayan Exclusive Speech

தமிழில் ஒரு பிரேமம்.. அசத்தல் காதல் கதை - ஜிவி பிரகாஷின் பேச்சிலர் முழு விமர்சனம்.!!

இசை :

சித்து குமார் என்பவர் இந்த படத்திற்கு பின்னணி இசை அமைத்துள்ளார். அது படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பாடல்கள் ரசிக்கின்ற ரகம்.

ஒளிப்பதிவு :

தேனீஸ்வரர் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.

இயக்கம் :

அறிமுக இயக்குனரான சதீஷ் செல்வகுமார் இந்த படத்தை தன்னுடைய முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு அழகாக சொல்ல வந்த விஷயத்தை சொல்லியுள்ளார். மலையாளத்தில் பிரேமம், தெலுங்குவில் அர்ஜுன் ரெட்டி போன்ற படங்களைப் போல தமிழில் பேச்சுலர் என சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படத்தை இயக்கியுள்ளார்.