பாக்யாவிற்கு உதவும் கோபி, சோகத்தில் ராதிகா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
பாக்யாவிற்கு கோபி உதவி செய்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செல்வியும் பாக்யாவும் நடந்து கொண்டு வர பாக்யாவிடம் செல்வி உங்க மாமியார் என்னமோ உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைப்பதிலேயே உறுதியாக இருக்கு என்று சொல்ல பாக்யா கோபப்பட்டு வாட்டர் பாட்டிலை செல்வியிடம் கொடுக்க எனக்கு தண்ணி தாகம் இல்லைக்கா என்று சொல்ல உனக்கு குடிக்க இல்ல வாய கழுவு என்று சொல்லுகிறார்.
அது ஒன்னு மட்டும் நான் எப்பவுமே நடக்க விட மாட்டேன் என்ன பத்தி கடுகளவு தெரிஞ்சி இருந்தாலும் அத்தை அப்படி பண்ண மாட்டாங்க அப்படி மீறி பண்ணாங்கன்னா எல்லாருக்கும் ஒரு கும்பிடு போட்டுட்டு நான் வெளியே வந்துட்டே இருப்பேன் என்று சொல்லுகிறார். நீ இத பத்தி தயவுசெய்து பேசாதே என்று செல்வியை அழைத்து சென்று விடுகிறார். மறுபக்கம் ராதிகா சோகமாக உட்கார்ந்து போனை பார்த்துக் கொண்டிருக்க ராதிகாவின் அம்மா சாப்பிட கூப்பிடுகிறார் எனக்கு வேண்டாம் என்று சொல்ல அவர் அங்க ஜாலியா சாப்பிட்டு நல்லபடியா தான் இருக்காரு நீ சாப்பிடாம உடம்புக்கு கெடுத்துக்காதே என்று சொல்ல ராதிகா ஃபோனையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
எதுக்கு போன பாத்துட்டு இருக்க ஏதாவது முக்கியமான கால் வர வேண்டியது இருக்கா என்று சொல்ல கோபி பண்ணுவார் என்று பார்க்கிறேன் என்று சொல்லுகிறார் அவர் பண்றதுக்கு வாய்ப்பே இல்லை என்று சொல்ல நான் போகும்போது அவர் தூங்கிட்டு இருந்தாரு. அதனால பாக்க முடியல உங்க வீட்ல யாராவது சொல்லி இருக்க மாட்டாங்களா என்று கேட்க ராதிகாவின் அம்மா நீ என் வயித்துல தான் பொறந்தியானு எனக்கு சந்தேகமா இருக்கு நீ அந்த பக்கமே வரக்கூடாது உங்க பேசக்கூடாதுனு சொல்றவங்க நீ வந்ததை சொல்லி இருப்பாங்க நினைக்கிறியா கண்டிப்பா சொல்லி இருக்க மாட்டாங்க என்று சொல்ல ராதிகா சோகமாக இருக்கிறார்.
மறுபக்கம் ஈஸ்வரி கோபிக்கு சாப்பாடு செய்து கொடுக்க கோபி சாப்பிட முடியாமல் சாப்பிடுகிறார். இவ்வளவு சாப்பாடு எப்படிமா சாப்பிடுவது என்று கேட்க இனியா நான் உங்களுக்கு ஃபர்ஸ்ட் டைம் ஆம்லெட் போட்டு கொடுத்து இருக்கேன் டாடி பாதி தான் சாப்பிட்டு இருக்கீங்க என்று சொல்ல இதுவே சாப்பிட முடியலடா என்று சொல்லுகிறார். பிறகு தட்டை கீழே வைக்க ஈஸ்வரி நீ இப்படி பண்ணா சாப்பிட மாட்டேன் என்று கோபிக்கு ஊட்டி விடுகிறார்.பிறகு ஸ்கூலுக்கு போகும்போது இது மாதிரி சமைச்சு கொடுத்ததெல்லாம் ஞாபகம் இருக்கா என்று சொல்ல அது எப்படிமா மறக்க முடியும் அதே டெஸ்ட் அப்படியே இருக்கு என்று சொல்லி பேசிக்கொள்கின்றனர். இதையெல்லாம் ஜெனி வாசலில் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்.
உடனே கோபி செழியன் மற்றும் இனியாவிடம் நீங்க ரெண்டு பேரும் சாப்டீங்களா என்று கேட்க இனியா உங்க அம்மா மட்டும் தான் உங்களுக்கு விதவிதமா பண்ணி தருவாங்களா எங்க அம்மாவும் எங்களுக்கு சமைப்பாங்க என்று சொல்லுகிறார்.
சாப்பிட்டு முடித்துவிட்டு உட்கார்ந்திருக்க ஈஸ்வரி இப்பதான் கோபி நீ தெளிவா இருக்கேன் என்று சொல்ல ம்மா கொஞ்சம் வெளியே போயிட்டு வரலாம்னு தோணுது என்று சொல்லுகிறார். எங்கப்பா போகணும் என்று கேட்க இல்லம்மா பக்கத்துல ராதிகாவை போய் பாத்துட்டு வரேன் என்று சொல்லுகிறார். நீ எதுக்கு கோபியாக போகணும் உடம்பு சரியில்லைன்னா அவ தானே வந்து உன்ன பார்த்திருக்கணும் என்று கேட்க இங்க வர அவளுக்கு சங்கடமா இருந்திருக்கும் மா என்று சொல்லுகிறார். பிறகு நாங்க எல்லாம் என்ன பேயா பிசாசா என்று ஈஸ்வரி கேட்கிறார். ராதிகா வந்ததை கோபியிடம் சொல்லாமல் வராமல் இருப்பதாக சொல்லி இன்னும் ஏற்றி விடுகிறார். பிறகு கோபியிடம் ஈஸ்வரி அப்பாவோட இறுதி சடங்கு உன்ன பண்ண விடாம பண்ணது மிகப்பெரிய தப்புன்னு நான் இப்பதான் யோசிக்கிறேன் செத்துப்போன மனுஷனை யோசிச்சேன் தவிர உயிரோடு இருக்க உன்ன பத்தி யோசிக்கல என்று மன்னிப்பு கேட்கிறார். பிறகு கோபி அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல விடுங்கம்மா நான் தான் தப்பா நினைச்சுட்டேன் அதுவே இல்லாம நீங்க ஜெயிலுக்கு போன விஷயத்துல என்னால எதுவும் பேச முடியாம போயிடுச்சு என்று மாறி மாறி மன்னிப்பு கேட்டுக்கொள்ள ஜெனி இதையெல்லாம் பார்த்து கடுப்பாகி நம்ம வெளியே போய் சாப்பிடலாம் வா என்று குழந்தையை தூக்கி வருகிறார்.
உடனே பாக்யா வர இருவரும் பேசிக் கொள்கின்றனர். குழந்தை சாப்பிடலையா என்று கேட்க ரொம்ப நேரமா ஊட்டிக்கிட்டு இருக்கேன் சாப்பிட மாட்ற என்று சொல்ல சரி நான் வந்து ஊட்டி விடுகிறேன் என்று சொல்லி கை கழுவிட்டு வரேன் என்று உள்ளே போக வேண்டாம் போனீங்கன்னா டென்ஷனா இருப்பியா என்று சொல்ல என்னாச்சு என்று பாக்கியம் கேட்கிறார். பிறகு நடந்த விஷயங்களை ஜெனி சொல்ல எனக்கு கோவமா வருது ஜெனி பேசாம மாடிக்கு போறதுக்கு இங்கேயே படிக்கட்டு வச்சிரலாமா இருக்கு.ஆப்ரேஷன் பண்ணி வந்திருக்காருன்னு நானும் பொறுமையா போய்கிட்டு இருக்கேன் இவங்க அலம்பல் தாங்க முடியல என்று புலம்பிக்கொண்டே இருக்கிறாள்.
மறுபக்கம் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க இனிய சப்ஜெக்ட்டில் டவுட் கேட்கிறார் அதற்கு கோபி ஈசியாக போனில் எடுத்துக் கொடுக்க இனியா சந்தோஷப்படுகிறார்.
பாக்கியா செழியனை கூப்பிட்டு ரெஸ்டாரன்ட் ஆர்டரில் ஒரு குழப்பம் இருப்பதாகவும் அதற்கு என்ன செய்யலாம் என்றும் கேட்கின்றனர் இதை எல்லாம் கூட்டி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பிறகு கோபி என்ன ஐடியா கொடுக்கிறார்?அதற்கு பாக்கியா சம்மதம் தெரிவிக்கிறாரா? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.