பாக்யாவை பழிவாங்கும் சுதாகர். ஆதரவாக கோபி நிற்பாரா? பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப்போவது என்ன?
பாக்யாவை சுதாகர் பழிவாங்க திட்டம் போட கோபி பாக்கியாவிற்கு ஆதரவாக நிற்பாரா என்பது குறித்து பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் சுதாகர் பாக்யாவிடம் ரெஸ்டாரன்ட் கேட்க பாக்யா தர மறுத்ததால் இனியாவை பெண் கேட்டு வந்து குடும்பத்தாரிடம் பேசி பாக்யாவிடம் வெத்து பத்திரத்தில் கையெழுத்து போட வைத்து அதில் இனியாவிற்கு ரெஸ்டாரன்ட் கிப்ட் கொடுத்ததாக பாக்யாவை ஏமாற்றி பாக்கியாவின் ரெஸ்டாரன்ட் இல் இருந்து துரத்தி விடுகிறார்.
இதனால் கோபப்பட்ட பாக்கியா சுதாகர் ஆஃபீஸ்க்கு சென்று அவரை அசிங்கப்படுத்தி பேச கோபமான சுதாகர் பாக்யாவை பழிவாங்க அவரது இன்னொரு ரெஸ்டாரன்ட் பற்றி விசாரித்து வைத்துக் கொள்கிறார்.
இன்று வெளியான ப்ரோமோவில் பாக்கியா வைத்திருக்கும் ரெஸ்டாரன்ட் இன் ஓனர் வந்து இன்னைக்கு நைட் ஓட நீங்க காலி பண்ணனும் என்று சொல்லுகிறார். அதற்கு பாக்யா காய்கறி எல்லாம் வாங்கி வைத்து விட்டோம் என்று சொல்ல அதற்கான பணத்தை நான் கொடுத்துடறேன் என சொல்லி காலி பண்ண சொல்லுகிறார் உடனே வீட்டுக்கு வந்த பாக்கியா குடும்பத்தாருடன் சுதாகர் என்னோட இன்னொரு ரெஸ்டாரண்டையும் வாங்கிட்டாரு என்று சொல்லுகிறார்.
வீட்டில் இருக்கும் அனைவரும் எதற்கு அப்படி பண்ணனும் என்று கேட்க என்ன பழி வாங்க தான் என்று பாக்யா சொல்லுகிறார் உடனே கோபி சுதாகர் வீட்டுக்கு சென்று இது குறித்து பேசுகிறார். கோபி பாக்யாவிற்கு ஆதரவாக நிற்பாரா?சுதாகரின் பதில் என்னவாக இருக்கும்?என்ற பரபரப்பான திருப்பங்களுடன் இனிவரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.

