நடந்து முடிந்த இனியாவின் கல்யாணம்.. பாக்யாவிற்கு அதிர்ச்சி கொடுத்த சுதாகர்.. பரபரப்பான திருப்பங்களுடன் நடக்கப்போவது என்ன?
இனியாவின் கல்யாணம் நடந்து முடிய சுதாகர் பாக்யாவிற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் சுதாகர் பாக்யாவின் ரெஸ்டாரன்ட் வாங்க தனது மகனை இனியாவிற்கு கல்யாணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்.
இது தெரியாமல் கோபியும் ஈஸ்வரியும் சுதாகரின் வார்த்தையைக் கேட்டு பாக்யாவிடம் சம்மதம் தெரிவிக்க சொல்லுகின்றனர். பாக்யாவும் ஒரு கட்டத்திற்கு மேல் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு சம்மதித்து விடுகிறார் அதனை தொடர்ந்து தற்போது இந்த வார ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில் இனியாவிற்கு கல்யாணம் நடந்தது போலவும் சுதாகர் ரெஸ்டாரண்ட்டில் இனிமேல் இது அவருக்கு சொந்தம் என்று சொல்வது போல் சொல்ல பாக்யா வீட்டில் வந்து கோபி மற்றும் ஈஸ்வரி இடம் அவர் அந்தப் பத்திரத்தில் இனியாவுக்கு ரெஸ்டாரன்ட் கிப்ட் கொடுக்கிற மாதிரி எழுதி இருக்காரு நான் கஷ்டப்பட்டு வாங்குன ரெஸ்டாரன்ட்க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு ஆயிடுச்சு என்று சொல்லி கோபப்படுகிறார்.
இதற்கு குடும்பத்தினர் பதில் என்ன சொல்ல போகிறார்கள்? பாக்யாவின் அடுத்த முயற்சி என்ன என்பதை இனிவரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.
