ஈஸ்வரி சொன்ன வார்த்தை, வருத்தத்தில் ராதிகா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
ஈஸ்வரி சொன்ன வார்த்தையால், ராதிகா வருத்தத்தில் இருக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பொண்டாட்டி தான் கையெழுத்து போடணும் என்று சொல்லி பாக்யாவிடம் கொடுக்க நான் போட மாட்டேன் என்று சொல்லி விடுகிறார். ஈஸ்வரி எவ்வளவு சொல்லியும் பாக்யா இவங்க ரெண்டு பேரும் அவரோட பசங்க தான் போடட்டும் என்று சொல்ல செழியன் கையெழுத்து போடுகிறார் கோபிக்கு ஆபரேஷன் தொடங்கி நடந்து கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ராதிகாவின் அம்மா மாப்பிள்ளைக்கு போன் போடு என்று சொல்லுகிறார்.
முதலில் மறுக்கும் ராதிகா அவங்க அம்மா சொல்லும் படி போனை போடுகிறார் இரண்டு வாட்டி போன் போக செழியன் பார்க்கிறார். ஈஸ்வரி இதை ஆஃப் பண்ணுங்க என்று சொல்ல இனியா வாங்கி ஸ்விட்ச் ஆஃப் பண்ணுகிறார் உடனே ராதிகாவின் அம்மா நீ நேத்து என்ன பண்ணியோ அதே தான் இன்னிக்கு அவல் பண்ணிக்கிட்டு இருக்காரு என்னவோ போங்க என்று சொல்லுகிறார். பாக்யா எழிலிடம் செல்விய வீட்டுக்கு போக சொல்லு ஜெனி தனியா இருப்பா என்று சொல்ல இல்லம்மா செல்வி அக்கா வீட்ல தான் இருக்காங்க அமிர்தாவும் வீட்டுக்கு போய் இருக்கா என்று சொல்லுகிறார். செழியனுக்கு போன் வர போனை எடுக்கும் பொழுது கோபியின் பர்ஸ் கீழே விழுகிறது அதனை எடுத்துப் பார்த்து ஈஸ்வரி கண்கலங்குகிறார்.
என்னாச்சு பாட்டி என்று கேட்க நான் இவ்வளவு வெறுத்தாலும் அவன் என் மேல பாசமா தான் இருந்திருக்கான் சின்ன வயசுல இருந்து என்ன நான் உனக்கு ரொம்ப புடிக்கும் நல்லா படிச்சு வேலைக்கு போய் என்ன தாங்கு தாங்குன்னு தாங்கண்ணா ஆனா நான் தலை முழுகிட்டேன்னு சொன்னதுக்கு அப்புறமும் இன்னமும் என் மேல பாசமா இருக்கான் என்று சொல்லி அழுகிறார். மறுபக்கம் ராதிகா என்ன நடந்திருக்கும் என்று யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருக்க கிளவுட் கிச்சனிலிருந்து போன் வருகிறது சார் இன்னும் வரல எப்ப வருவாரு என்று கேட்க வெளியே போயிருக்காரு எனக்கு எப்ப வருவாருன்னு தெரியல என்று சொல்லி போனை வைக்கிறார். உடனே செந்திலுக்கு போன் பண்ண நான் மும்பை வந்து இருக்க பிளைட்ல வரும்போது வந்த கால் என்னால ரீச் பண்ண முடியல திருப்பியும் பண்ண சுவிட்ச் ஆப்னு வருது என்று சொல்லி அவரும் போனை வைக்கிறார். ராதிகா என்னைவிட அதிகமாக தெரிஞ்சா செந்தில்கே அவர் எங்க இருக்காருன்னு தெரியல என்று சொல்லி யோசிக்கிறார்.
எழில் ஈஸ்வரியிடம் ஏதாவது சாப்பிடறீங்களா பாட்டி என்று கேட்க எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார் உடனே இனியாவிடம் கேட்க டாடிக்கு ஆபரேஷன் முடியுற வரைக்கும் எனக்கு எதுவுமே வேண்டாம் என்று சொல்லி விடுகிறார் உடனே டாக்டர் வந்து கோபிநாத்துக்கு நல்லபடியா ஆப்ரேஷன் முடிஞ்சது. அவர் ஹெல்தியா இருக்காரு ஒன்னும் பிரச்சனை இல்ல என்று சொல்ல அனைவரும் நிம்மதி அடைகின்றனர். செழியன் நாங்க அப்பாவ பார்க்கலாமா என்று கேட்க ரெண்டு நாள் ஐசியுல இருப்பாரு. அதுக்கப்புறம் வார்டுக்கு மாத்துனதுக்கு அப்புறம் நீங்க பாருங்க என்று சொல்லுகிறார்.
ராதிகா உண்மையை தெரிந்து கொள்ள என்ன செய்கிறார்?ராதிகாவுக்கு உண்மை தெரிய வருகிறதா? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.