பாட்டு பாடி அசத்திய கோபி, இனியா மீது பழி போடும் சந்திரிகா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கோபி பாட்டு பாடி அசத்த, மறுபக்கம் இனியா மீது சந்திரிகா பழி போட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா பாட்டு பாடுபவர்களுக்கு 30 சதவீதம் டிஸ்கவுண்ட் என்ற விஷயத்தை போஸ்டர் உடன் ஒட்டி இருக்க ஒரு பெண் பாட்டு பாடிவிட்டு சாப்பிடுகிறார். கொஞ்ச நேரத்தில் கோபி காரில் இறங்க ஹோட்டலில் வந்து உட்கார்ந்தவுடன் செல்வி நான் அவங்களை பாத்துக்குறேன் நீ கோபி சார் பார்த்துக்கோ என்று சொல்லிவிடுகிறார். பாக்கியா கோபியிடம் வந்து என்ன சாப்பிட வேண்டும் என்று கேட்க சாரி பாக்யா அம்மா யோசிக்காம யார் மனசு கஷ்டப்படும்னு தெரியாம பேசிடறாங்க என்று சொல்ல நான் கேட்டதுக்கு இன்னும் நீங்க பதிலே சொல்லல என்று சொல்ல இரண்டு இட்லி மட்டும் போதும் என்று சொல்லுகிறார்.
பிறகு சாப்பிட்டு முடிக்க வேறு ஏதாவது வேண்டுமா என்று கேட்க அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு பாக்யா பில் எழுதப் போக கோபி பில் போட போறியா ஒரு நிமிஷம் இரு பாக்யா என்று காரில் இருந்து கிட்டார் எடுத்துக்கொண்டு வருகிறார். செல்வி பாக்யாவிடம் சாருக்கு பாட தெரியுமா என்று கேட்க தெரியாது கோபி ஹோட்டலில் உட்கார்ந்து இளையநிலா பொழிகிறது என்ற பாடலை பாட அனைவரும் மெய் மறந்து கேட்கின்றனர் வெளியிலிருந்து வந்தும் சிலர் பாட்டை கேட்டு ரசிக்க பிறகு அனைவரும் கைத்தட்டுகின்றனர். கோபி பாக்கியாவிடம் என்னோட டேலண்ட் பத்தி நீ எதுவுமே சொல்லலையே பாக்கியா என்று சொல்ல நான் பில் எடுத்துட்டு வரேன் என்று சொல்லுகிறார் நான் கேட்டாலும் வாசித்து இருக்கேன் அதுக்கும் சேர்த்து கொடுக்க முடியுமா டிஸ்கவுன்ட் இருக்கு அதெல்லாம் கிடையாது பாட்டு பாடறதுக்கு மட்டும் தான் என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் சுதாகர் சந்திரிகாவிடம் அவன் நிலைமை தெரிஞ்சி எதுக்கு அவனை வெளிய அனுப்பின என்று கோபப்பட்டு பேச அவன் தான் போக கூடாதுன்னு சொன்னா கோபப்படுறான் என்று சொன்ன கொஞ்ச நேரத்தில் ட்ரக்ஸ் போதையில் வருகிறார். சுதாகர் அவரை தாங்கிப்பிடித்து உட்கார வைக்க கொஞ்ச நேரத்தில் இனியாவும் வந்துவிட என்னாச்சு அங்கிள் இவருக்கு என்று சொன்னால் நான் முதல்ல போய் அவன எங்க ரூம்ல படுக்க வைத்துவிட்டு வரும் அவன் இங்கேயே இருக்கட்டும் என்று சொல்லி படுக்க வைத்துவிட்டு வெளியில் வருகின்றனர்.
என்னஆச்சி அங்கிள் குடிச்சிருக்காரா என்று கேட்க உடனே சந்திரிகா கோபமாக ஆமா அவன் குடிச்சு தான் இருக்கான். எல்லாத்துக்கும் காரணம் நீதான் கல்யாணம் ஆனதுக்கப்புறம் லவ் பண்ற பையன் கிட்ட பேசினா எந்த ஆம்பளைக்கு கோவம் வராது உன்னால என் பையன் வாழ்க்கையே நாசமா போச்சு என்பது போல் இனியாவின் மேல் பழியை தூக்கி போடுகின்றனர். சுதாகர் நீ போய் படு அப்புறம் பேசிக்கலாம் என்று சொல்லி அனுப்பி விடுகிறார்.ஈஸ்வரி சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க செழியன் கவனித்து வந்து பேசுகிறார் ஆனால் ஈஸ்வரி தண்ணீர் எடுக்க தானே வந்த போ என்று சொல்லி சொன்னவுடன் என்னாச்சு பாட்டி எதுக்கு இப்படி பேசுறீங்க என்று கேட்கிறார். கொஞ்ச நேரத்தில் பாக்யா வந்துவிட நான் பாத்துக்குறேன் நீ போய் படு செழியா என்று அனுப்பி விடுகிறார்.
பிறகு ஈஸ்வரி பாக்யாவிடம் என்ன கேள்வி கேட்கிறார்? அதற்கு பாக்யாவின் பதில் என்ன? ஈஸ்வரி என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து வேண்டும்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 18-06-25
