பாக்யா எடுத்த முடிவு, ஈஸ்வரி கொடுத்த ஷாக், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
பாக்கியா எடுத்த முடிவால் ஈஸ்வரி ஷாக் கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் வீட்டில் டெக்கரேஷன் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க செழியன், ஈஸ்வரி, கோபி மூவரும் ஹாலிவுட் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். பாக்கியா வீட்டுக்கு வந்து எழிலை உள்ளே கூப்பிட்டு வந்து நிற்க ஏற்கனவே அவசர அவசரமா எந்த விஷயத்தையும் பண்ணாதீங்கன்னு சொன்னேன் யாருமே என்னோட பேச்சை கேட்கல இப்போ எங்க வந்து நின்னு இருக்கு பாத்திங்களா என்று சொல்ல என்ன விஷயம் சுத்தி வளைச்சு பேசாம சொல்லு பாக்யா என்று சொல்ல சுதாகர் பாக்யாவிடம் வந்து ரெஸ்டாரன்ட் கேட்ட விஷயத்தையும் அவரோட ரெஸ்டாரன்ட் குரூப்ல சேர்க்கிற விஷயத்தை முதற்கொண்டு எல்லாத்தையும் சொல்ல கோபி அவங்க என்ன ரெஸ்டாரன்ட்யா கேக்குறாங்க அவங்களோட பிரான்சில் தானே ஆட் பண்ணிக்கிறேன்னு சொல்றாங்க என்று அசால்ட் ஆக சொல்லுகிறார்.
அதுக்கப்புறம் அது எப்படி என்னோட ரெஸ்டாரன்ட் ஆகும் இது நான் கஷ்டப்பட்டு உருவாக்கின ரெஸ்டாரன்ட் என்று சொல்லுகிறார். இதுக்காக தான் அவரு இனியாவது பொண்ணு கேட்டு வந்திருக்கிறார் என்று சொல்ல நீ வச்சிருக்கறத அப்படியே பைவ் ஸ்டார் ஹோட்டல் பாரு இப்ப என்ன உன் பொண்ணு இனியாக்காக தானே கொடுக்க போற உன் பொண்ணு வாழ்க்கையை விட உனக்கு ரெஸ்டாரன்ட் தான் முக்கியமா என்று கேட்க எனக்கு என் பொண்ணு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு ரெஸ்டாரன்ட் முக்கியம் என்று சொல்ல ஈஸ்வரி மற்றும் செழியன் கோபி மூவரும் ரெஸ்டாரன்டை கொடுப்பது பற்றி பேச பாக்யா எதுவும் பேச முடியாமல் அமைதியாக நிற்க எழில் இடம் நீயும் ஏதாவது பேசு என்று சொல்லுகிறார் பாக்யா இல்லம்மா நடப்பதெல்லாம் பார்த்தா ஏதோ தப்பா இருக்க மாதிரி தெரியுது என்று எழில் சொல்லுகிறார்.
ரிசப்ஷன் வச்சிக்கிட்டு இந்த மாதிரி நீ பேசினால் இந்த கல்யாணம் எப்படி நடக்கும் என்று ஈஸ்வரி கேட்க அப்பையாவது புரிஞ்சுக்கோங்க இது பிசினஸ்காக நடக்கிற கல்யாணம் என்று இனியாவ பகடகாய பயன்படுத்துறாங்க என்று சொல்ல ஈஸ்வரி சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார் நான் என்ன சொன்னாலும் புரியாத உங்ககிட்ட போய் பேசிக்கிட்டு இருக்காங்க இந்த விஷயத்தை எப்படி பாத்துக்கணும்னு எனக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். உடனே ஈஸ்வரி செழியன் எழில் கல்யாணத்துல பிரச்சனை பண்ண மாதிரி எதுவும் பண்ணாம அமைதியா இருக்காளே என்று நினைத்தேன் ஆரம்பிச்சுட்டா என்று சொல்ல எழில் எப்ப பாத்தாலும் எதுக்கு பாட்டி அம்மாவையே குறை சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார்.
கோபி இந்த விஷயத்துல பாக்யாவுக்கு சந்தேகம் வந்திருக்கு நம்ம தான் தீர்த்து வைக்கணும் நான் போய் சம்மந்திய பார்த்து பேசிட்டு வரேன் என்று சொல்லி கிளம்ப மறுபக்கம் பாக்யா ரூமில் கோபி மற்றும் ஈஸ்வரி பேசியதை நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார் அந்த நேரம் பார்த்து இனியா எனக்கு எல்லா விஷயமும் தெரியுமா இதுக்கு மேல நீ யாருக்காகவும் எதுக்காகவும் எதையும் விட்டுக் கொடுக்காத நீ உன்னோட ரெஸ்டாரன்ட் கொடுக்க வேண்டாம் நீ என்னுடைய லைஃபை ஓரம் வச்சுட்டு உனக்கு என்ன தோணுதோ அதை செய்யுமா எனக்கும் இதுல சந்தோஷம்தான் அவங்க ரெஸ்டாரன்ட் கொடுத்தா தான் அந்த கல்யாணம் நடக்கும் அப்படிப்பட்ட கல்யாணம் எனக்கு வேண்டாம் என்று சொல்லுகிறார். நான் எந்த முடிவெடுத்தாலும் உனக்கு சந்தோஷம் தானே இனியா என்று சொல்ல சந்தோஷம் தாம்மா என்று சொல்லிவிட்டு கீழே வரசொந்தக்காரர்கள் அனைவரும் வீட்டிற்கு வந்திருக்கின்றனர் ஈஸ்வரி அவர்களிடம் மாப்பிள்ளை வீட்டுக்காரருக்கு குறித்து பெருமையாக பேசிக் கொண்டிருக்க இதனை கவனித்து பாக்கியா கிச்சனுக்கு சென்று மேலே செல்ல போகும் நேரத்தில் பாக்யாவை கூப்பிட்டு பேசுகின்றனர் பாக்யா சந்தோஷமாக இல்லாததால் என்ன ஆச்சு என்று கேட்க ஈஸ்வரி அதெல்லாம் ஒன்னும் இல்ல வேலை செஞ்சு டயர்டா இருக்கா என்று சொல்லி ரூமுக்கு அழைத்து சென்ற பெயருக்கு எல்லாரும் முன்னாடி இருக்க உனக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லன்றது எல்லாரும் தெரிஞ்சுக்கணுமா என்று கேட்கிறார்.
உலகத்துல உன்ன மாதிரி ஒரு அம்மாவை நான் பார்த்ததில்லை இனியாவுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை அமைஞ்சிருக்கு அத விட்டுட்டு ரெஸ்டாரன்ட் தான் முக்கியம்னு பேசிகிட்டு இருக்க என்று சொல்ல ரிசப்ஷன் வச்சுக்கிட்டு ரெஸ்டாரண்ட் கொடுத்தாகணும்னு சொல்றவங்க வீட்ல இனியா எப்படி சந்தோஷமா இருப்பான் என்று சொல்ல எல்லாரையும் கூப்பிட்டு பத்திரிக்கை அடிச்சு நிறைய செலவு பண்ணியாச்சு இதுக்கு மேலயும் நீ கல்யாணத்தை நிறுத்தனும்னு பாத்த நம்ம குடும்பத்துக்கு தான் அசிங்கம். நீ சந்தோஷமா உங்க ரெஸ்டாரன்ட் நடத்த ஆனால் இனிய வாழ்க்கை நாசமா போயிடும் என்று சொல்லுகிறார்.நீ இந்த கல்யாணத்தை நிறுத்தினால் உன்னை மன்னிக்கவே மாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் கோபி சுதாகர் வீட்டுக்கு வர என்ன பேசுகிறார்? அதற்கு சுதாகரின் பதில் என்ன?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
