கோபியை காப்பாத்த பாக்யாவுக்கு ஆடர் கொடுத்துள்ளார் ஈஸ்வரி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரிக்கு போன் போட்டு செஃப் லீவு நான் என்ன பண்றதுன்னு தெரியல பெரிய பிரச்சனை இல்ல மாட்டிக்கிட்டேன் என்று உதவி கேட்கிறார்.
உடனே ஈஸ்வரி ராமமூர்த்தியிடம் சொல்லிவிட்டு கோபியுடன் ரெஸ்டாரன்ட் கிளம்பி வர அம்மா இன்னைக்கு தான் சூப்பரா சமைப்பீங்களே கொஞ்சம் எதாவது பண்ணுங்க என்று சொல்ல ஈஸ்வரி மெனுவை கேட்டதும் அதிர்ச்சி அடைந்து 100, 200 பேருக்கெல்லாம் என்னால சமைக்க முடியாது அவ்வளவு பெரிய ஆளெல்லாம் கிடையாது வேற ஏதாவது பண்ணலாம் என்று யோசிக்கிறார்.
கோபி பாக்யாவை பற்றி பேசி புலம்ப ஈஸ்வரிக்கு பாக்யா கிட்ட ஆர்டர் கொடுக்கலாம் என்று ஐடியா தோன்றுகிறது. பிறகு கோபிக்கு தெரியாமல் வெளியே சென்று எனக்கு தெரிந்து ஒருத்தன் உங்க வீட்ல பங்க்ஷன் அவங்க ஒரு கேட்டரிங் இல்ல ஆற்றுக் கொடுத்திருந்தாங்க திடீர்னு அவங்களால சமைச்சு கொடுக்க முடியாம போயிடுச்சு அதனால எனக்காக நீ சமைச்சு கொடு என்று சொல்ல ஒரே மணி நேரத்தில் எப்படி முடியும் என பாக்கியா தயங்க ஈஸ்வரி கம்பெல் பண்ணி சம்மதிக்க வைக்கிறார். நீ சமைச்சு முடிச்சுட்டு சொல்லு நானே ஆல அனுப்பி எடுத்துக்கிறேன் என்று ஈஸ்வரி சொல்கிறார்.
அதைத் தொடர்ந்து கோபி ஆபிஸ் ரிசப்ஷனில் இருக்கும் பெண்ணிடம் பாக்கியா நம்பரை கொடுத்து மெனு அனுப்பிடு என்று சொல்ல அந்த பெண் மெனுவோடு சேர்த்து லொகேஷன் அனுப்பி வைக்கிறார். பாக்கியா சமைத்து முடித்துவிட்டு ஈஸ்வரிக்கு போன் பண்ண நாட் ரீச்சபிள் என வருகிறது.
ஆனால் லொகேஷன் அனுப்பி இருப்பதால் டெலிவரி பண்ணிட்டு சொல்றாங்க என்னமோ என்று அந்த ரிசப்ஷன் பெண்ணிற்கு ஃபோன் பண்ணி கேட்க அவர் டெலிவரி பண்ணிடுங்க என்று கூறுகிறார். ஓகே கோபி மற்றும் ஈஸ்வரி பதட்டத்துடன் இருக்க ஈஸ்வரி பாக்யாவுக்கு போன் பண்ண முயற்சி செய்ய போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருக்கிறது கவனித்து சார்ஜ் போடுகிறார்.
அதற்குள் பாக்கியா எல்லாவற்றையும் ஏற்றி அனுப்பி பின்னாடியே ஆட்டோவில் வந்து கொண்டிருக்கிறார். ஈஸ்வரி கொஞ்சம் போன் சார்ஜ் ஆனது தனியாக வந்து பாக்யாவுக்கு போன் பண்ணு இன்னும் பத்து நிமிஷம் என்று சொல்லி போனை வைத்து விடுகிறார். இங்கே ஈஸ்வரி டெலிவரி பாய்களை கூப்பிட்டு ஒரு வேன் ரெடி பண்ண சொல்கிறார்.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக சாப்பாட்டுடன் வந்து நிற்க கோபி சாப்பாடு வந்துடுச்சு என்று சந்தோஷப்பட பின்னாடியே பாக்யா வந்த இறங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். பாக்கியா என்ன அத்தை பங்க்ஷன் வீட்டுக்குன்னு சொன்னீங்க லொகேஷன் இங்க காட்டுது மாத்தி அனுப்பிட்டிங்களா எங்க டெலிவரி பண்ணனும்னு சொல்லுங்க பண்ணி விடுவோம் என்று கேட்கிறார். எங்கிருந்தவர்கள் சரியான அட்ரஸுக்கு தான் வந்திருக்கீங்க செப் லீவு அதனாலதான் உங்ககிட்ட ஆர்டர் கொடுத்து இருந்தோம் உண்மையை உடைக்கின்றனர்.
பாக்கியா வெளியில் வந்து சாப்பாட்டை இறக்கி கொண்டிருக்கும் நேரத்தில் கோபி எங்ககிட்ட ஏமா சொன்னிங்க என்று புலம்பி கொண்டு இருக்க நான் ஆள் வச்சு எடுத்துட்டு வந்துடலாம் தான் நினைச்சேன் ஆனா இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கல என்று ஈஸ்வரி பதில் சொல்ல உள்ளே வந்த பாக்கியா நீங்க ஒன்னு நினைச்சீங்க ஆனா கடவுள் எல்லாத்தையும் தெரியப்படுத்திட்டாரு என்று பல்பு கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.