
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா, பழனிசாமி, லோபிதா ஆகியோர் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ்க்கு சென்று இருக்க இன்னைக்கு டெஸ்ட் வேற சொல்லி இருக்காங்க எப்படி எழுதுவது என்று தெரியவில்லை என பழனிச்சாமி லோபியாவிடம் சொல்லி புலம்ப பாக்கியா படித்துக் கொண்டிருப்பதை பார்த்து கலாய்க்கின்றனர்.
அதன் பிறகு ஸ்போக்கன் இங்கிலீஷ் மாஸ்டர் வந்ததும் இன்னைக்கு கிளாஸ்க்கு போயிடலாமா என பாடம் நடத்த தொடங்க பழனிச்சாமி அப்பாடா நல்ல வேலை டெஸ்ட் மறந்துட்டாங்க என்று லோபிதாவிடம் சொல்லி சந்தோஷப்பட இரண்டு பேரும் அப்படி என்ன பேசிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார்.

ஆனால் பழனிச்சாமி சமாளிக்க தெரியாமல் டெஸ்ட் சொல்லி இருக்கீங்க அதை மறந்துட்டீங்க அது பத்தி தான் சந்தோஷமா சொல்லிக்கிட்டு இருந்தேன் என்று சொல்ல ஆமா நானே மறந்துட்டேன் சரி டெஸ்ட்டுக்கு எல்லாம் ரெடி ஆகுங்க நான் கொஸ்டின் பேப்பர் எடுத்துட்டு வரேன் என போக எல்லோரும் பழனிச்சாமி திட்டுகின்றனர்.
அதன் பிறகு டெஸ்ட் தொடங்க பழனிச்சாமி பாக்யாவின் பேப்பரை வாங்கி எழுதுகிறார். மறுபக்கம் அமிர்தாவின் அம்மா உங்களுக்கு நீ ஒரு குழந்தை பெத்துக்கோங்க இல்லனா உனக்கு நிறைய பிரச்சனை வரும் நீயும் நிலாவும் இந்த வீட்டில நல்லபடியா இருக்கணும்னா உங்களுக்கு கண்டிப்பாக ஒரு குழந்தை வேண்டும் அப்பொழுதுதான் இந்த குடும்பத்துக்கும் உனக்கும் ஒரு பிடிப்பு இருக்கும் என சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து மீண்டும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸில் பழனிச்சாமி பாக்யாவிடம் எல்லா வேலைகளையும் பார்த்துக்கிட்டு எப்படி படிச்சீங்க என்று கேட்க மல்டி டாஸ்கிங் பண்றது பழகிப்போச்சு என்று எப்படி படித்தேன் என்பது குறித்து சொல்கிறார் பாக்யா.
அதனைத் தொடர்ந்து வீட்டில் அமிர்தா நமக்கு ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்ல விரும்பிய இப்படி கேட்கிற என்று எழில் கேள்வி கேட்கிறார். அம்மா சொன்ன விஷயம் பற்றி சொல்ல எழில் நமக்கு நிலா இருக்கும்போது வேற குழந்தை எதற்கு இதை பத்தி பேச வேண்டாம் என சொல்லி விடுகிறார்.

அடுத்ததாக வீட்டுக்கு வரும் ராதிகா எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்து தனக்கு ப்ரமோஷன் கிடைத்திருப்பதாக சொல்கிறார் மேலும் சம்பளம் அப்படியே டபுள் மடங்காகி விட்டதாகவும் சொல்ல எல்லோரும் வாழ்த்து சொல்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து ராதிகாவின் அம்மா கமலா சரி வாங்க சாப்பிடலாம் என்று கூப்பிட கோபி ராதிகாவிடம் ஆபீஸ் விஷயமா வெளியே போயிட்டு வரேன்னு என சொல்ல குடிச்சிட்டு வந்தீங்க உங்க கிட்ட பேச மாட்டேன் என ராதிகா அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
