உடம்பில் ஏற்பட்ட பிரச்சனையால் உடல் எடை கூடிக் கொண்டு செல்வதாக ரேஷ்மா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் ரேஷ்மா. அதைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்திலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் சீரியலில் மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் லைவ் வீடியோவில் சமீப காலமாக நான் குண்டாகி வருவதாக சொல்லி போற வரவங்க எல்லாம் என்னை கிண்டல் அடித்து விட்டு செல்கிறார்கள்.

எனக்கு உடம்பில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பது பற்றி யாரும் யோசிப்பதில்லை என லைவ் வீடியோவில் பேசியுள்ளார். இதனால் ரேஷ்மாவுக்கு உடலில் ஏதோ பிரச்சனை இருக்கிறதா? உங்களுக்கு என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.