வீட்டுக்கு போய் அவமானப்பட்டுள்ளார் கோபி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் இனியாவின் மூலமாக கோபிக்கு பாக்யா, ஈஸ்வரி மற்றும் செல்வி ஆகியோர் கேரளா ட்ரிப் செல்வது தெரிய வருகிறது.

இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வரும் கோபி இனியாவிடம் இனியா இவங்கள நம்பி கேரளா ட்ரிப் போகாத, ஒரு வாரம் மட்டும் தள்ளிவை நானே உன்னை கூட்டிட்டு போறேன் என பேசுகிறார். இவளால ஒன்னும் பண்ண முடியாது, அவ்வளவு தூரம் தான் இவளால கூட்டிட்டு போக முடியாது ரிஸ்க் எடுக்காத உன்னுடைய சேப்டிக்காக தான் சொல்றேன் உன்னுடைய காலேஜ்ல யார் கிட்ட பேசணும்னாலும் நான் பேசுறேன் என சொல்கிறார்.

பிறகு எழில் அம்மா ஏன் கூட்டிட்டு போகக்கூடாது என்று கேட்க அவ கூட்டிட்டு போகக்கூடாது என்று பதில் கொடுக்க அதை சொல்ல நீங்க யாரு என்று கேட்க கோபி நான் இனியாவோட அப்பா என்று சொல்ல பாக்கியா நான் இனியாவோட அம்மா உங்களுக்கு என்ன உரிமை இருக்கோ அதே உரிமை எனக்கும் இருக்கு என பதிலடி கொடுக்கிறார்.

அம்மாவா வீட்டுல இருந்து நல்லா சாப்பாடு செஞ்சு கொடுத்து பாத்துக்க அது போதும் என்று சொல்ல அம்மானா சாப்பாடு செஞ்சு கொடுக்கிறது மட்டும் தான் வேலையா? ஊர்ல எல்லாரும் அப்படித்தான் இருக்காங்களா என இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாக கோபி ஈஸ்வரியிடம் சென்று அம்மா நான் சொல்றத நீங்களாவது கேளுங்க என்று சொல்ல சரி நீ சொல்றது நான் கேட்கிறேன் இவங்களோட நான் போகல என்று சொல்ல கோபி பெருமூச்சு விட்டு ரொம்ப சந்தோஷம் என கூறுகிறார்.

இதனால் மற்றவர்கள் அதிர்ச்சியாக ஈஸ்வரி அப்படினா நீ இனியாவை கூட்டிட்டு போயிட்டு வா என்று செக்மேட் வைக்க கோபி என்னால இப்போ எப்படிமா முடியும் என்று கேட்க முடியாதுல்ல அப்போ வாயை மூடிட்டு இரு என அவமானப்படுத்தி வெளியே அனுப்புகிறார்.

வீட்டுக்கு வந்த கோபியிடம் ராதிகா உங்க அம்மா அப்பாவை வர சொல்லிட்டீங்களா என்று கேட்க கோபி அம்மாவை போக வேண்டாம் என்று தான் சொன்னேன் ஆனா அவங்க நான் சொல்றது கொஞ்சம் கூட கேட்கல என்று இனியா கதையை பற்றி பேச ராதிகா கடுப்பாகி கோபப்படுகிறார். அப்போ மயூவோட பங்ஷனுக்கு நீங்க அவங்கள கூப்பிடல அப்படித்தானே என்று கேட்க அவங்க எப்படி வருவாங்க வர மாட்டாங்க என்று கோபி சொல்கிறார்.

எல்லாரும் அவங்க இந்த பங்க்ஷனுக்கு வரணும் வர சொல்லுங்க என்று சொல்ல பிறகு கோபி ராதிகாவை சமாதானம் செய்ய முயற்சி செய்ய ராதிகா அவங்க இங்க வந்து தான் ஆகணும், நீங்க அவங்கள கூப்பிடனும் என்று உறுதியாக சொல்லிவிட கோபி சரி நான் கூப்பிடறேன் என திரும்பவும் வீட்டுக்கு கிளம்பி வருகிறார்.

தயக்கத்தோடு வீட்டுக்கு வந்து பங்ஷனுக்கு கூப்பிட ஈஸ்வரி நான் எதுக்கு அந்த ஃபங்சனுக்கு வரணும், அதெல்லாம் வர முடியாது யாரோ பெத்த பொண்ணுக்கு நான் ஏன் வந்து நிக்கணும் என அதிர்ச்சி கொடுக்க கோபி எவ்வளவு கெஞ்சியும் முடியாது என சொல்லி அனுப்பி வைக்கிறார்.

பிறகு ராமமூர்த்தி பெரியவர்கள் செய்த தப்புக்கு சின்ன குழந்தை என்ன பண்ணும்? நானே போய் பார்க்கணும்னு தான் இருந்தேன் போயிட்டு வரலாம் என்று சொல்ல ஈஸ்வரி முடியாது என்று மறுக்க பாக்யாவும் போயிட்டு வாங்க இப்பவும் மயூ மாறாமல் அதே பாசத்துடன் தான் இருக்கா, அவளுக்காக போய்ட்டு வாங்க என்று சொல்ல ஈஸ்வரி வேண்டா வெறுப்பாக சம்மதிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.