உதவி கேட்க வந்த கோபிக்கு ராதிகா ஷாக் கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கோபி இனியாவை பிபிஎம் கோர்ஸில் சேர்க்கப் போவதாக அப்ளிகேஷன் உடன் வீட்டுக்கு வந்த நிலையில் இனியா நான் விஸ்காம் படிக்கிறேன் என சொல்ல கோபி இல்ல உனக்கு அதெல்லாம் செட் ஆகாது என இனியாவின் முடிவை மாற்ற முயற்சி செய்ய பாக்யா அதான் விஸ்காம் படிக்க போறதா முடிவெடுத்து தல அப்புறம் என்ன என்ன கேட்க கோபி எல்லாரையும் பிடித்து திட்டுகிறார்.
எழில் சொல்ல சொல்ல கேட்காமல் விஸ்காம் படித்து இன்றைக்கு வேலை வெட்டி இல்லாமல் இருப்பதாக திட்ட பாக்கியா அவள் நல்லா தான் இருக்கான் கூடிய சீக்கிரம் அடுத்த படம் பண்ணுவான் என சொல்ல கோபி கிழிப்பான் என நக்கல் அடிக்கிறார். இருந்தாலும் இனியாவின் முடிவை மாற்ற முடியாத காரணத்தினால் இனியாவுடைய பியூச்சர் கெட்டு போனால் அதுக்கு நீங்கதான் காரணம் என்று சொல்லிவிட்டு வெளியே செல்கிறார்.
கோபியால் இனியா வருத்தப்பட அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் பாக்கியாவுக்கு ஒரு போன் கால் வந்து அவர் வெளியே போகும் போது கோபி இடியட் இடியட் என்று திட்ட பாக்யா என்ன சொன்னீங்க என கேட்க அருகில் வரும் கோபி உன்ன தான் திட்டிக்கிட்டு இருந்தேன் குழந்தைங்க ஆசைப்படுது என்பதற்காக எல்லாத்தையும் செய்யக்கூடாது அவங்களுடைய ஃபியூச்சருக்கு எது சரின்னு யோசிச்சு முடிவு எடுக்கணும். படிப்ப பத்தி உனக்கு என்ன தெரியும்? முன்ன பின்ன காலேஜ் பக்கம் போயிருக்கியா காலேஜ் பஸ்ஸயாவது பார்த்து இருக்கியா என்று அவமானப்படுத்தி பேசுகிறார்.
இனியாவோட ஃபியூச்சர் மட்டும் கெட்டு போனால் உங்க யாரையும் சும்மா விடமாட்டேன் என்று சொல்ல அப்போது ராதிகா போன் போட கோபி போனை கட் செய்து விடுகிறார். பிறகு கோபி வீட்டுக்கு வர ராதிகா உங்களால பாக்காத மறக்க முடியல அவகிட்ட பேசாம இருக்க முடியல என கோபப்பட கோபி அப்ளிகேஷனை காட்டி நான் இனியவன் பி பி எம் படிக்க வைக்கலாம்னு ஆசைப்பட்டால் அவங்க விஸ்காம் படிக்க வைக்க முடிவெடுத்துட்டாங்க அதை தான் அவகிட்ட புடிச்சு திட்டிக்கொண்டு இருந்தேன்.
எனக்கு புலம்ப கூட உரிமையில்லையா என ராதிகாவிடம் அப்பாவித்தனமாக கோபி பேச ராதிகா சாரி நான் தெரியாம தப்பா நினைச்சுட்டேன் என சொல்கிறார். அடுத்ததாக மறுநாள் காலையில் இனியா காலேஜ் செல்ல ரெடியாக இருக்க பாக்யா அவரை அழைத்துச் செல்ல வருகிறார். செழியன் பணம் இருக்கா நான் வேண்டும் நான் கொடுக்கட்டுமா என்று கேட்க எல்லோரும் ஆச்சரியப்படுகின்றனர். ஆனால் பாக்யா அதெல்லாம் வேண்டாம் என்கிட்ட பணம் இருக்கு நான் பாத்துக்குறேன் என்று சொல்லி இனியாவை அழைத்துக் கொண்டு கிளம்புகிறார்.
மறுபக்கம் கோபி இனியாவுக்கு அட்மிஷன் போட போகணும், பீஸ் கட்ட பணம் வேண்டும் என அக்கவுண்ட்டை பார்க்க ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது ஆனால் பீஸ் ஒன்றரை லட்சம் ரூபாய் என்பதால் ஆபீஸ்க்கு போன் செய்து 50,000 ட்ரான்ஸ்வர் செய்ய சொல்ல ஆபீஸ் அக்கவுண்டில் பணம் இல்லை என சொல்கின்றனர். இதனால் ராதிகாவிடம் உதவி கேட்கலாம் என கோபி முடிவு எடுக்க ராதிகாவிடம் பேச போக அவர் நீங்க பணம் கட்டுவது நான் வேணாம்னு சொல்ல மாட்டேன் இதையெல்லாம் தடுக்க மாட்டேன் என சொல்லி ராதிகா அங்கிருந்து நகர்ந்து விடுகிறார்.
இதனால் கோபி உதவி கேட்க வரதுக்கு முன்னாடியே இவ பாட்டுக்கு ஒரு பதில் சொல்லிட்டு போறா இப்ப பணத்துக்கு என்ன பண்றது என்று புலம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.