ராதிகாவின் அம்மாவால் கோபி அதிர்ச்சி அடைய இனியாவால் புது பிரச்சனை வெடித்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் இனியா அம்மா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் போவதை நிறுத்தி விட்டதாக சொல்ல கோபி இன்னும் கொஞ்ச நாள்ல காலேஜ் போவதை நிறுத்திடுவா என்று சொல்ல இனியா அம்மா பாவம் டாடி என்று கூறுகிறார்.

பிறகு பாக்யாவும் எழிலும் உட்கார்ந்து நிலா பாப்பாவுக்கு உடம்பு எப்படி இருக்கு என்று பேசிக்கொண்டு இருக்க ஈஸ்வரியும் அங்கு வந்து உட்கார பாக்யா எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு இருப்பதை பார்க்கிறார். பிறகு செல்வி வர பாக்யா பாத்திரத்தை துலக்க சொல்ல ஈஸ்வரி அதுக்கு முன்னாடி நீ என்கூட வா என்று சொல்லி கூட்டிச் சென்று யோகாசனம் செய் என்று படாத பாடு படுத்துகிறார்.

அடுத்து காலேஜில் இனியா பாக்யாவிடம் கேரளா ரோட் ட்ரிப் போகணும் என்று காலேஜில் அசைன்மென்ட் கொடுத்திருக்காங்க என்று சொல்ல பாக்கியா எப்படி போக போற என்று கேட்க டாடிக்கு மெசேஜ் பண்ணி இருக்கேன், அவர் நேரில் வரேன்னு சொல்லி இருக்காரு அவர் வந்தததும் பிளான் பண்ணிட்டு போக வேண்டியது தான் என்று சொல்ல பாக்கியா போயிட்டு வா போயிட்டு வா என்று சொல்கிறார்.

அதனை தொடர்ந்து கோபி வந்ததும் இனியா விஷயத்தை சொல்ல கண்டிப்பாக போகலாம் என்று கூறுகிறார். அதன் பிறகு கோபி வீட்டுக்கு வந்து சாப்பிட்டு கொண்டு இருக்க அப்போது மயூ ஷாப்பிங் போக வேண்டும் என சொன்னதால் கோபி ஷாப்பிங் போயிட்டு அப்படியே டின்னர் முடிச்சிட்டு வரலாம் என்று சொல்ல ராதிகாவும் மயூவும் சந்தோஷப்படுகின்றனர்.

இதற்கிடையில் இனியா போன் செய்ய கோபி சாப்பிடாமல் பேசிவிட்டு வந்து ராதிகாவிடம் இனியா தான், கேரளா போறோம் அத பத்தி பேசிட்டு இருந்தோம் என்று சொல்கிறார். கேரளா போறீங்களா எப்போ யார் யார் போறீங்க என்று ராதிகா கேட்க நானும் இனியாவும் மட்டும்தான், வெள்ளிக்கிழமை ஜெனி சீமந்தம் முடிஞ்சிட்டு சனிக்கிழமை காலையில் கிளம்புகிறோம் என்று சொல்கிறார்.

ராதிகா என்கிட்ட எதுவுமே டிஸ்கஸ் பண்ணல என்று கேள்வி கேட்க என்ன டிஸ்கஸ் பண்ணனும் எனக்கு புரியல என்று கோபி திருப்பி கேட்க எனக்கு ஏதாவது பிளான் இருக்கானு கேட்டீங்களா என்று ராதிகா சொல்ல எந்த பிளானா இருந்தாலும் அது எல்லாம் ஓரம் வச்சிட்டு இனியா கூடத்தான் போகணும் ஏன்னா இது எஜுகேஷன் சம்பந்தமா போகிறது தள்ளி போட முடியாது என்று சொல்லி ஷாக் கொடுக்கிறார்.

உடனே ராதிகாவின் அம்மா எப்ப பாத்தாலும் இனியா உங்க புள்ளைங்கனு சுத்திகிட்டு இருக்கீங்க, அதுக்கு எதுக்கு ராதிகாவை கல்யாணம் பண்ணனும் ஏன் உங்க பொண்ண கூட்டிட்டு போக அந்த வீட்ல வேற ஆளே கிடையாதா என்று கேள்வி கேட்க நிறைய பேர் இருக்காங்க ஆனா அவளுக்கு அப்பாவா நான் போய் நிற்கணும் என்று கோபி சொல்கிறார். அடுத்து உங்க பெரிய பையனுக்கு குழந்தை பிறக்கும் அதுக்கு போய் நிப்பீங்களா? இப்படி அந்த குடும்பத்தோடு இருப்பீங்களா என்று கேட்க கோபி என்ன பேசிகிட்டு இருக்கீங்க நான் பாக்கியாவ தான் விவாகரத்து பண்ணேன், அந்த குடும்பத்தை விவாகரத்து பண்ணல. எனக்கு மயூரா எப்படியோ அந்த மாதிரி தான் என்னுடைய பிள்ளைங்களும் என்னுடைய பிள்ளைகள் எப்படியோ அப்படித்தான் மயூராவும் என்று கோபி பதிலடி கொடுத்துவிட்டு சாப்பிடாமல் எழுந்து செல்கிறார்.

திரும்பவும் கோபி இனியாவை சென்று சந்தித்து பேச இதை பார்க்கும் ராதிகாவின் அம்மா ராதிகாவிடம் வந்து திரும்பவும் அவர் அந்த வீட்டு வெளியே தான் கிடக்கிறார் இதை இப்படியே விட்டால் நல்லது இல்ல, உன் வாழ்க்கையை காப்பாத்திக்க நீ ஏதாவது செஞ்சு தான் ஆகணும் என்று ராதிகாவை ஏற்றி விடுகிறார்.

அடுத்து கோபி வந்ததும் ராதிகா இந்த விஷயம் பற்றி பேச இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.